சினிமா செய்திகள்

மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம் + "||" + Ramba description of the re-acting

மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்

மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்
தமிழ், தெலுங்கு பட உலகில் 1990 மற்றும் 2000–களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரம்பாவை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.
உள்ளத்தை அள்ளித்தா படத்தில் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக தோன்றினார். செங்கோட்டை, அருணாசலம், ராசி, வி.ஐ.பி., காதலா காதலா, ஆனந்தம் போன்றவை இவருக்கு முக்கிய படங்கள்.

2010–ல் திருமணம் செய்து குடும்பத்தோடு கனடாவில் குடியேறினார். அதோடு சினிமாவை விட்டும் விலகினார். அதன்பிறகு குடும்ப தகராறு, வழக்குகள், கணவரின் பிரிவு என பிரச்சினைகள் ரம்பாவை கலங்கடித்தன. இப்போது அந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு சகஜ நிலைக்கு திரும்பி உள்ள அவர் மீண்டும் நடிக்க வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–


திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த எனக்கு இப்போது நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. எனவே மீண்டும் நடிக்க முடிவு செய்து நல்ல கதைக்காக காத்து இருந்தேன். திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அந்த படத்தின் கதையும் எனது கதாபாத்திரமும் பிடித்துள்ளது.

குஷ்பு, நதியா என்று முன்னணி கதாநாயகிகளை வைத்து படங்கள் எடுத்தவர் திரிவிக்ரம் என்பதால் அவர் படத்தில் நடிக்கலாம் என்று இருக்கிறேன். ஜூனியர் என்.டி.ஆருடன் ஏற்கனவே நாகா, எமதுங்கா ஆகிய படங்களில் நடனம் ஆடிய அனுபவம் இருக்கிறது. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.’’

இவ்வாறு ரம்பா கூறினார்.