சினிமா செய்திகள்

துப்பாக்கி சூட்டில் ரசிகர் பலி: நடிகர் தனுஷ் அனுதாபம் + "||" + Tiger Dhanush sympathetic

துப்பாக்கி சூட்டில் ரசிகர் பலி: நடிகர் தனுஷ் அனுதாபம்

துப்பாக்கி சூட்டில் ரசிகர் பலி: நடிகர் தனுஷ் அனுதாபம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் கலவரமாக மாறி போலீஸ் துப்பாக்கி சூட்டிலும், உயிர்ப்பலியிலும் முடிந்தது.
சென்னை, 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் கலவரமாக மாறி போலீஸ் துப்பாக்கி சூட்டிலும், உயிர்ப்பலியிலும் முடிந்தது. இதில் 13 பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துப்பாக்கி சூட்டை பலரும் கண்டித்து வருகிறார்கள். பலியானவர்களில் எஸ்.ரகு என்ற காளியப்பன் என்பவர் நடிகர் தனுஷ் ரசிகர் என்பது தெரியவந்துள்ளது. அவரது மறைவுக்கு தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

‘‘துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி எஸ்.ரகு என்ற காளியப்பன் மரணம் அடைந்தது என்னை நிலைகுலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்.’’

இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...