நடிகை ரம்பா மீண்டும் கர்ப்பம்


நடிகை ரம்பா மீண்டும் கர்ப்பம்
x
தினத்தந்தி 24 May 2018 9:45 PM GMT (Updated: 24 May 2018 8:43 PM GMT)

நடிகை ரம்பா மீண்டும் கர்ப்பம்

நடிகை ரம்பா 2010-ல் கனடாவை சேர்ந்த இந்திரகுமாரை மணந்து அந்த நாட்டிலேயே குடியேறினார். இவர்களுக்கு லாண்யா, சாஷா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இப்போது மூன்றாவதாகவும் கர்ப்பமாகி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ரம்பா தகவல் வெளியிட்டுள்ளார். மூன்றாவது குழந்தைக்கு தாயாகப்போகிறேன். பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. என் குடும்பத்துக்காக கடவுளை வேண்டுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

வயிறு பெரிதாகி கர்ப்பமாக இருக்கும் தோற்ற படத்தையும் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரம்பாவுக்கு இப்போது 39 வயது ஆகிறது. அவருக்கும் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு வதந்திகள் பரவின. அதனை ரம்பா மறுத்தார். அண்ணன் மனைவியுடன் தகராறு, போலீஸ் புகார் பிரச்சினைகளிலும் சிக்கி அவற்றில் இருந்து மீண்டார்.

தெலுங்கு படத்தில் நடிக்க அவருக்கு சில மாதங்களுக்கு முன்னால் வாய்ப்புகள் வந்தன. மீண்டும் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. கர்ப்பமாக இருப்பதால் நடிப்பதை தள்ளிவைத்துள்ளார்.

Next Story