கையை பிடித்து இழுத்தனர் ரசிகர்களிடம் சிக்கிய ஜான்வி


கையை பிடித்து இழுத்தனர் ரசிகர்களிடம் சிக்கிய ஜான்வி
x
தினத்தந்தி 27 May 2018 10:30 PM GMT (Updated: 27 May 2018 9:10 PM GMT)

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி. இவர் மராத்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ‘ரீமேக்’கான ‘தடக்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி. இவர் மராத்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ‘ரீமேக்’கான ‘தடக்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது அவருடன் சேர்ந்தே பொது நிகழ்ச்சிகளுக்கு வந்த ஜான்வி இப்போதெல்லாம் குடும்பத்தினர் இல்லாமல் தனியாகவே செல்கிறார்.

மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு பாதுகாவலர்கள் இல்லாமல் தனியாக சாப்பிட சென்றார். அவர் வந்துள்ள தகவல் அறிந்து ரசிகர்கள் ஓட்டல் முன்னால் திரண்டனர். வெளியே வந்த ஜான்வியிடம் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்தனர். இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார்.

சிலர் அத்துமீறி ஜான்வி கையை பிடித்து இழுத்தனர். முகத்திலும் முதுகிலும் தொட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டல் ஊழியர்கள் விரைந்து வந்து கூட்டத்தினரை விலக்கி ஜான்வியை பத்திரமாக அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Next Story