சினிமா செய்திகள்

கோலமாவு கோகிலா’ படத்தில் “நயன்தாராவுக்கு ஜோடி இல்லை” + "||" + In the film 'Kolamavu Kokila' Nayantara does not have a pair

கோலமாவு கோகிலா’ படத்தில் “நயன்தாராவுக்கு ஜோடி இல்லை”

கோலமாவு கோகிலா’ படத்தில்
“நயன்தாராவுக்கு ஜோடி இல்லை”
கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடி இல்லை என்று டைரக்டர் நெல்சன் கூறினார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க விரும்பும் நயன்தாராவுக்கு, ‘அறம்’ படத்தின் வெற்றி, தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அவர், ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை பற்றி அதன் டைரக்டர் நெல்சன் கூறியதாவது:-

“இது, கடத்தல் தொழிலை பற்றிய கதை. இந்த படத்தில், ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக நயன்தாரா வருகிறார். அம்மா, அப்பா, தங்கை என்று ஒரு குடும்பத்தை தாங்கி பிடிக்கும் பெண்ணாக நடிக்கிறார். அவருடைய அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், அப்பாவாக ஆர்.எஸ்.சிவாஜி, தங்கையாக ஜாக்குலின் ஆகியோர் வருகிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில், சரவணன் நடிக்கிறார்.

படத்தில், நயன்தாராவுக்கு ஜோடி இல்லை. அவரை ஒருதலையாக காதலிப்பவராக யோகி பாபு நடித்து வருகிறார். கதையை கேட்டதுமே நயன்தாரா நடிக்க சம்மதித்தார். படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். அவருடைய இசையில், சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்” என்கிறார், டைரக்டர் நெல்சன். 


தொடர்புடைய செய்திகள்

1. ஜோதிகா, நயன்தாரா, திரிஷாவுடன் சமந்தாவும்...!
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகள் ஜோதிகா, நயன்தாரா, திரிஷா.
2. சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம் - கருணாநிதி மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல்
கருணாநிதி மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
3. கமல், நயன்தாரா படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்–2’ படம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10–ந் தேதி திரைக்கு வருகிறது.
4. போதை மருந்து கடத்தும் சர்ச்சை கதை? நயன்தாரா படத்துக்கு ‘யு’ சான்று அளிக்க மறுப்பு
சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் நயன்தாரா ‘கோலமாவு கோகிலா’ என்ற கதாநாயகன் இல்லாத படத்தில் நடித்து முடித்துள்ளார்.
5. நகைச்சுவை கதை மீது நயன்தாரா ஆர்வம்!
நயன்தாராவுக்கு கனமான கதைகளில் நடித்து அலுத்து விட்டதாம்.