பிரபாகரன் வாழ்க்கை படமாகிறது


பிரபாகரன் வாழ்க்கை படமாகிறது
x
தினத்தந்தி 30 May 2018 10:00 PM GMT (Updated: 30 May 2018 7:36 PM GMT)

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ‘சீறும் புலிகள்’ என்று பெயரிட்டுள்ளனர். வெங்கடேஷ்குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே உனக்குள் நான், நீலம் படங்களை டைரக்டு செய்தவர். ஸ்டுடியோ 18 பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

பிரபாகரனின் இளம் வயது வாழ்க்கை, குடும்பம், போராளியாக அவர் மாறிய சூழ்நிலை, சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த யுத்தம் என்று அனைத்தையும் இந்த படத்தில் காட்சிப்படுத்துகின்றனர். பெரும்பகுதி படப்பிடிப்பை காட்டுப்பகுதிகளில் நடத்துகின்றனர். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது.

ஏற்கனவே ராஜீவ் கொலை வழக்கில் தேடப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சிவராசன், தணு ஆகியோரை பற்றி குப்பி என்ற பெயரில் படம் வெளிவந்தது. பிரபாகரன் மகன் சிறுவன் பாலசந்திரனை சிங்கள ராணுவம் கொன்றதையும் படமாக்கி வெளியிட்டனர். விடுதலைப்புலிகள் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா கொல்லப்பட்டதையும் படமாக்கி இருந்தனர். இப்போது பிரபாகரன் முழு வாழ்க்கை கதையும் படமாகிறது.

Next Story