சினிமா செய்திகள்

ஒரே நாளில் ரூ.136 கோடிஜுராசிக் வேல்டு-2 வசூல் சாதனை + "||" + Jurassic World-2 collection record

ஒரே நாளில் ரூ.136 கோடிஜுராசிக் வேல்டு-2 வசூல் சாதனை

ஒரே நாளில் ரூ.136 கோடிஜுராசிக் வேல்டு-2 வசூல் சாதனை
ஜுராசிக் வேல்டு-2 உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படம் திரைக்கு வந்து ஒரே நாளில் ரூ.136 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது.
கோலின் ட்ரெவோரோவ் இயக்கத்தில் கிரிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் நடித்து 2015-ல் வெளியான ஜுராசிக் வேல்டு ஹாலிவுட் படம் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்போது அதன் இரண்டாம் பாகம் ‘ஜுராசிக் வேல்டு பாலன் கிங்டம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் வருகிறார்கள். பயோனா டைரக்டு செய்துள்ளார்.

இந்த படம் திரைக்கு வந்து ஒரே நாளில் ரூ.136 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. கொரியாவில் அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தை காட்டிலும் அதிகம் வசூலித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் ரூ.6 கோடி கிடைத்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, பெல்ஜியம், பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இந்தவார இறுதி விடுமுறை நாட்களில் வசூல் மேலும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கின்றனர். இந்த படம் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். உலக கால்பந்து போட்டிகளால் அமெரிக்காவில் இந்த படம் வெளியாவது தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.