சினிமா செய்திகள்

படப்பிடிப்புக்காக அமெரிக்கா போகிறார்நடிகர் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து + "||" + Actor Vijay's birthday anniversary canceled

படப்பிடிப்புக்காக அமெரிக்கா போகிறார்நடிகர் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து

படப்பிடிப்புக்காக அமெரிக்கா போகிறார்நடிகர் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து
விஜய்யின் பிறந்த நாள், வருகிற 22-ந் தேதி வருகிறது. இந்த வருட பிறந்த நாளை அவர் கொண்டாடவில்லை.
விஜய்யின் 62-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இன்னொரு நாயகியாக முக்கிய வேடத்தில், வரலட்சுமி நடிக்கிறார்.

இது, அரசியல் சார்ந்த கதை என்பதால், நிறைய ‘பஞ்ச்’ வசனங்கள் வைக்கப்பட்டுள்ளன. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக விஜய் மற்றும் படக்குழுவினர் அமெரிக்கா செல்கிறார்கள்.

இதற்கிடையில், விஜய்யின் பிறந்த நாள், வருகிற 22-ந் தேதி வருகிறது. இந்த வருட பிறந்த நாளை அவர் கொண்டாடவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களின் துக்கத்தில் பங்கெடுக்கும் வகையில், அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்து விட்டார்.