சினிமா செய்திகள்

காதலர் நடிக்கும் படத்தை நயன்தாரா தயாரிக்கிறாரா? + "||" + Is Nayantara preparing?

காதலர் நடிக்கும் படத்தை நயன்தாரா தயாரிக்கிறாரா?

காதலர் நடிக்கும் படத்தை நயன்தாரா தயாரிக்கிறாரா?
நயன்தாராவுக்கு முதலில் சிம்புவுடன் காதல் இருந்தது. சிம்பு, ‘வல்லவன்’ படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்தார்.
நயன்தாராவுக்கு முதலில் சிம்புவுடன் காதல் இருந்தது. சிம்பு, ‘வல்லவன்’ படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த காதல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

சிம்புவும், நயன்தாராவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையதளத்தில் வெளியானதை தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தார்கள். அதன் பிறகு நயன்தாராவுக்கு பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டது. சிம்புவுக்கு நடிகை ஹன்சிகாவுடன் காதல் மலர்ந்தது.

பிரபுதேவாவை நயன்தாரா திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். கிறிஸ்தவராக இருந்த அவர், பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக இந்து மதத்துக்கு மாறினார். பிரபுதேவாவின் பெயரை நயன்தாரா தனது கையில் பச்சை குத்திக் கொண்டார். பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். என்றாலும், அவருடைய மகன்கள் இருவரையும் அவர் மறக்கவில்லை. அவர்களுடன் இருந்த தொடர்பை துண்டித்துக் கொள்ளவில்லை.

இது, நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து அவருக்கும், பிரபுதேவாவுக்கும் இருந்த காதல் முறிந்தது. சில நாட்கள் விரக்தியுடன் காணப்பட்ட நயன்தாரா, பிறகு தன்னைத்தானே தேற்றிக் கொண்டு படங்களில் முழு மூச்சாக நடிக்க ஆரம்பித்தார். தென்னிந்திய நடிகைகளில், ‘நம்பர்-1’ நாயகி என்ற அந்தஸ்தை பெற்றார்.

அவர், ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடித்தபோது, அந்த படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் நெருக்கம் ஏற்பட்டது. நாளடைவில், அது காதலாக மாறியது. இருவரும் ஜோடியாக பல வெளிநாடுகளுக்கு போய் வந்தார்கள். தற்போது இருவரும் தாலி கட்டிக் கொள்ளாத கணவன்-மனைவியாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ‘அறம்’ படத்தின் மூலம் நயன்தாரா தயாரிப்பாளராக மாறினார். அடுத்து விக்னேஷ் சிவன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை நயன்தாரா தயாரிக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது. விக்னேஷ் சிவன் டைரக்டு செய்ய, அதர்வா நடிக்கும் ஒரு புதிய படத்தையும் நயன்தாரா தயாரிக்க இருப்பதாக பேசப்படுகிறது.