சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் மும்தாஜ்! + "||" + BIGGBOSS home Crying crying Mumtaz!

பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் மும்தாஜ்!

பிக்பாஸ் வீட்டில் கதறி அழும்  மும்தாஜ்!
மும்தாஜ் சக போட்டியாளர்களிடம் கதறி அழும் காட்சி ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.


பிக்பாஸ் 2 நிகழ்ச்சி  கடந்த 17 - ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் யாஷிகா ஆனந்த், ஜனனி ஐயர், பொன்னம்பலம் , பாலாஜி, டேனியல், சென்ராயன், மும்தாஜ் உள்ளிட்ட 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் , இரண்டாவது நாளிலிருந்தே சிறு சிறு பிரச்சினைகள் வரத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் சமையல் செய்வதில் தொடங்கிய பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளது. நடிகை மும்தாஜ், மற்றும் பாலாஜியின் மனைவி நித்யா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மும்தாஜ் சக போட்டியாளர்களிடம் கதறி அழும் காட்சி  ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் "நடிகை மும்தாஜ் என்றாலே பலருக்கும் முதலில் நினைவில் வரும் பாடலான "கட்டி பிடி கட்டி பிடி டா" என்ற பாடலை யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் பாடலை பாட, மும்தாஜுடன் நடனமாடுகிறார் நடிகர் சென்ராயன்.

பின், 'நான் மும்தாஜுடன் சேர்ந்து நடனம் ஆடிவிட்டதாக, சென்ராயன் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் காட்சி காண்பிக்கப்படுகிறது'

இதைதொடர்ந்து, நடிகை மும்தாஜ் 'இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என அழுகிறார். பின் அங்கு அனைத்து போட்டியாளர்களும் கூடுகிறார்கள். ஷாரிக் மும்தாஜை கட்டி அனைத்து சமாதானம் செய்கிறார். பின் ஷாரிக் சென்ராயனை பார்த்து, 'ஏன்டா இப்படி பண்ற வெளியே போடா என்று கூறி அங்கிருந்து அனுப்புகிறார்'.