சினிமா செய்திகள்

மன அழுத்தத்தில் இருந்து விடுபட அனுஷ்கா யோசனை + "||" + Anushka idea to get rid of stress

மன அழுத்தத்தில் இருந்து விடுபட அனுஷ்கா யோசனை

மன அழுத்தத்தில் இருந்து விடுபட அனுஷ்கா யோசனை
மன அழுத்தத்தில் இருப்பவர்கள் விடுபட நடிகை அனுஷ்கா ஆலோசனை கூறியிருக்கிறார்.
நடிகை அனுஷ்கா இப்போதெல்லாம் அதிகமாக வாழ்க்கை தத்துவங்கள் பற்றி பேசுகிறார். கோவில்களுக்கு ஆன்மிக பயணங்களும் மேற்கொள்கிறார். மன அழுத்தத்தில் தவிப்பவர்கள் அதில் இருந்து விடுபட அனுஷ்கா ஆலோசனை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

‘‘எல்லோருக்கும் மன உளைச்சல் வருகிறது. இதனால் பலர் துவண்டு போகிறார்கள். அதுமாதிரி உணர்வுகள் ஏற்படும்போது அதில் இருந்து வெளியே வர 5 பேருக்கு உதவி செய்யுங்கள். பண உதவிதான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆறுதலான வார்த்தைகள் சொல்லலாம். அரவணைக்கலாம். 

இப்படி செய்யும்போது மன உளைச்சல் விலகும். மனதுக்குள் பெரிய மாற்றம் உருவாகும். மன அழுத்தம், பிரச்சினையில் சிக்குபவர்கள் விரக்தியாகவே இருப்பார்கள். தனக்கு வரும் சிறிய கஷ்டங்களை கூட பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பார்கள். அதில் இருந்து தப்பிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள். 

அவர்களின் கஷ்டங்களை காது கொடுத்து கேளுங்கள். அப்போது நம்முடைய கவலைகள் சிறியதாக தோன்றும். இதை நான் கடைபிடித்து வருகிறேன். எனக்கு மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து அதில் இருந்து மீள்கிறேன். 

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகை அனுஷ்கா எடை கூடினார் : கதாநாயகி வாய்ப்பு குறைந்தது
அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. 2005–ல் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
2. அனுஷ்காவுக்கு திருமண ஏற்பாடுகள்
அனுஷ்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
3. படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா
தமிழ், தெலுங்கு பட உலகில் நயன்தாராவுக்கு கடும் போட்டியாக வளர்ந்தவர் அனுஷ்கா.
4. இமயமலை கோவில்களுக்கு செல்லும் அனுஷ்கா
இமயமலை கோவில்களுக்கு அனுஷ்கா சென்றுள்ளார்.
5. எனக்கு தனிமையில் இருக்கவே பிடிக்கிறது - நடிகை அனுஷ்கா
எனக்கு தனிமையில் இருக்கவே பிடிக்கிறது என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.