சினிமா செய்திகள்

பாங்காக் நகர வீதிகளில்ஜோடியாக சுற்றும் ஆரவ்-ஓவியா + "||" + Paired ARAV - Oviya

பாங்காக் நகர வீதிகளில்ஜோடியாக சுற்றும் ஆரவ்-ஓவியா

பாங்காக் நகர வீதிகளில்ஜோடியாக சுற்றும் ஆரவ்-ஓவியா
ஆரவ் நடிகை ஓவியா இருவரும் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர், நடிகை ஓவியா. தனது இயல்பான நடவடிக்கைகளால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று, ‘ஓவியா ஆர்மி’ என்று தொடங்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளார்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின்போதே, ஆரவ்வை ஓவியா காதலித்தார். இதற்கு ஆரவ் மறுப்பு தெரிவிக்கவே தற்கொலை முடிவுக்கும் சென்றார். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றிபெற்றார்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்தநிலையில் ஆரவ்-ஓவியா அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர். இதுகுறித்து கிசுகிசுக்களும் வெளியானது. இந்தநிலையில், ஆரவ்-ஓவியா இருவரும் தாய்லாந்து தலைநகர் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்த புகைப்படங்களும் இணையதளத்தை கலக்குகின்றன. இது, திரையுலகில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதையடுத்து அவரது ரசிகர்கள் ஓவியாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து உள்ளனர். “விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்,” என்று அன்புடன் வேண்டுகோளும் விடுத்துள்ளனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...