சினிமா செய்திகள்

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி + "||" + Priya Warrier to act in a advertising film Rs.1 crore

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
பாடலில் கண்சிமிட்டி இந்தியா முழுவதும் பிரபலமானவர், பிரியா வாரியர்.
ஒரு ‘அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற மாணிக்ய மலராய பூவி பாடலில் இந்த கண்சிமிட்டும் காட்சி இடம்பெற்று இருந்தது. ஒரே பாடலில் முன்னணி கதாநாயகிகளையெல்லாம் சமூக வலைத்தளத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் பின்னுக்கு தள்ளினார். அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர்.


தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன. ஒரு அடார் லவ் வெளியான பிறகே அடுத்த படங்களை ஏற்கும் முடிவில் இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கில் வெளியிட அதிக தொகைக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக கூறுகின்றனர். மாணிக்ய மலராய பாடல் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

மத உணர்வுகளை புண்படுத்துவதாக பிரியா வாரியர் மற்றும் இயக்குனருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அவை தள்ளுபடி ஆனது. இந்த நிலையில் பிரியா வாரியருக்கு விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இப்போது இன்னொரு பெரிய கம்பெனி அவரை அணுகி உள்ளது. இதில் நடிக்க அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள முன்னணி நடிகைகள் இன்னும் ரூ.1 கோடி சம்பளத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கிறேனா? பிரியா வாரியர் விளக்கம்
‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தின் பாடல் காட்சியில் கண்சிமிட்டி பிரபலமான பிரியா வாரியர் தற்போது ஸ்ரீதேவி பங்களா என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்.
2. கண் சிமிட்டல் மூலம் பிரபலம் : இந்தி படத்தில் பிரியா வாரியர்
புருவ அசைவு மற்றும் கண்சிமிட்டல் மூலம் இந்திய பட உலகையும், ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பியவர் பிரியா வாரியர்.
3. ஸ்ரீதேவி பங்களாவில், பிரியா வாரியர்!
சமூக வலைத்தளங்களில் ஒரே நாளில் பிரபலமானவர், பிரியா பிரகாஷ் வாரியர். இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அவைளுக்கு பிரியா பிரகாஷ் வாரியர் உடனே சம்மதம் சொல்லவில்லை. பட வாய்ப்புகளை ஏற்க தயங்கினார். டைரக்டர் மற்றும் பட அதிபரை சந்திக்க அவர் மறுத்து விட்டார். இது, 6 மாதங்களுக்கு முன்பு நடந்த கதை.
4. 2018-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரியா வாரியர்!!
2018-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக பிரியா வாரியர் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...