சினிமா செய்திகள்

நடன மங்கை, அதிரடிக்கு மாறிய கதை...! + "||" + Dancer, action story

நடன மங்கை, அதிரடிக்கு மாறிய கதை...!

நடன மங்கை, அதிரடிக்கு மாறிய கதை...!
தி மம்மி படத்தில் அதிகமாக பேசப்பட்ட சோபியா, சமீபத்தில் வெளியான கிங்ஸ்மேன் திரைப்படத்தில் அதிரடி நாயகியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
டாம் குரூஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தி மம்மி’ திரைப்படத்தில் அதிரடியான பேயாக நடித்து அசத்தியவர், சோபியா போடெல்லா. அதிரடி, கவர்ச்சி, உருக்கமான நடிப்பு... என கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளும் சோபியா, குறுகிய காலத்திற்குள்ளாகவே பெரும் திரளான ரசிகர்களை சேர்த்துவிட்டார். தி மம்மி படத்தில் அதிகமாக பேசப்பட்ட சோபியா, சமீபத்தில் வெளியான கிங்ஸ்மேன் திரைப்படத்தில் அதிரடி நாயகியாக அவதாரம் எடுத்திருக்கிறார். அதிரடி நாயகியாக அறியப்படும் சோபியா பற்றி சில தகவல்கள் இதோ....

சோபியா போடெல்லா அல்ஜீரியாவில் பிறந்தவர். இவரது தந்தை ஸபி போடெல்லா, ஜாஸ் இசை கலைஞர். தாய் ஆர்கிடெக்ட்.

இன்று ஹாலிவுட்டின் பிரபல நடிகையாக திகழும் சோபியா, ஆரம்பத்தில் நடன கலைஞராகவே அறிமுகமானார். 2011-ம் ஆண்டிற்கு மேலாகத்தான் சோபியாவின் நடிகை வாழ்க்கை ஆரம்பமானது.

சோபியா, 5 வயதிலிருந்தே நடனம் சார்பான கல்வியை கற்றவர். 10 வயதாக இருக்கையில், அவரது குடும்பம் அல்ஜீரியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர்ந்தது. அதனால் சோபியா நடனக்கலையுடன், ஜிம்னாஸ்டிக் கலையையும் கற்றுக்கொண்டார்.

உடலை வளைக்கும் கலையான ஜிம்னாஸ்டிக்கில் சோபியா சிறப்பாக செயல்பட்டதால், பிரான்ஸ் நாட்டின் தேசிய ஜிம்னாஸ்டிக் அணியில் இடம்பிடித்தார். 18 வயது வரை தேசிய அணியின் முக்கிய அங்கமாகவும் திகழ்ந்தார். இதற்கு பிறகுதான் இசை, நடனம், நடிப்பு என சோபியாவின் வாழ்க்கை பயணம் திசைமாறியது.

2006-ம் ஆண்டு வாகாபேண்ட் குரூ என்ற நடனக் குழுவில் சேர்ந்த சோபியா, பிரான்ஸ் நாட்டின் முக்கிய சாலைகளில் நடன மாடி அசத்தினார்.

இவரது ஆட்டத்திறமை ஹாலிவுட் நடன இயக்குனர் பிளான்சா லீயை கவர, அவரது நடனக்குழுவில் அங்கம் வகித்தார்.

அதோடு உலக நாடுகளில் இருக்கும் நடனம் சார்பான படிப்பு களையும் பயில தொடங்கினார்.

ோபியாவின் நடிப்பு வாழ்க்கை, முதன்முதலில் விளம்பர படமாகவே ஆரம்பித்தது. டி.வி. விளம்பரத்தில் சிறு காட்சியில் நடன மங்கையாக தோன்றினார். அதில் கிடைத்த அனுபவம் சோபியாவை மேலும் சில விளம்பர படங்களில் நடிக்க தூண்டியது.

பிறகு இசை ஆல்பங்களில் நடிக்க தொடங்கினார். தன்னுடைய இசை குழுவினருடன் சேர்ந்து புதுப்புது இசை ஆல்பங்களை உருவாக்கினார். அதில் சோபியாவே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.

இதற்கிடைப்பட்ட காலத்தில் மைக்கேல் ஜாக்சனின் இசை ஆல்பங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். அந்த வாய்ப்பு கிடைக்கும் தருணத்தில் மைக்கேல் ஜாக்சன் இறந்துவிடவே, மீண்டும் தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பினார்.

இருப்பினும் சோபியாவிற்கு நடனம் சார்பான திரைப்படத்திலேயே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை அவருடைய தந்தை ஏற்படுத்தி கொடுத்தார். அதை சரியாக பயன்படுத்தி கொண்ட சோபியா, ‘ஸ்டீரீட் டான்ஸ்-2’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடனமாடி, நடித்து அசத்தினார். அதற்கு பிறகுதான் ஹாலிவுட் கதவுகள் முழுவதுமாக திறக்கப்பட்டு, சோபியாவை வரவேற்றன. அதற்கு பிறகு சோபியா படுபிசியாகிவிட்டார்.

மான்ஸ்டர், கிங்ஸ்மேன், ஸ்டார் ட்ரக், டைகர் ரைட், தி மம்மி, அட்டாமிக் பிளாண்ட், கிளைமாக்ஸ்... போன்ற தொடர்ச்சியான வெற்றி படங்களால், ஹாலிவுட்டில் நிலையான இடம் பிடித்தார்.

ஒரு காலத்தில் ஹாலிவுட்டின் அதிரடி நாயகியாக புகழப்பட்ட ஏஞ்சலீனா ஜோலி இன்று ஒருசில படங்களிலேயே தோன்றுகிறார். அதுவும் கானல் நீரை போன்று ஒருசில காட்சிகளில் மட்டுமே தோன்றி மறைகிறார். இந்நிலையில் சோபியாவின் அதிரடி, ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஏஞ்சலீனாவை நினைவூட்டுகிறதாம். அதனால் சோபியாவை ஹாலிவுட்டின் இக்கால அதிரடி மங்கையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அதற்கேற்ப சமீபத்தில் கிங்ஸ்மேன் திரைப்படத்தில் சோபியா அதிரடியாக நடித்திருக்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அதனால் சோபியா அதிரடியான திரைப்படங்களையே தேர்வு செய்து நடிக்க இருக்கிறாராம்.