சினிமா செய்திகள்

சினிமாவில் நடிக்க அழைப்பு : தெண்டுல்கர் மகளுக்கு கதாநாயகி வாய்ப்புகள் + "||" + Tendulkar daughter is the heroine chance

சினிமாவில் நடிக்க அழைப்பு : தெண்டுல்கர் மகளுக்கு கதாநாயகி வாய்ப்புகள்

சினிமாவில் நடிக்க அழைப்பு : தெண்டுல்கர் மகளுக்கு கதாநாயகி வாய்ப்புகள்
கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சாதனைகள் நிகழ்த்தியவர் சச்சின் தெண்டுல்கர்.
சச்சின் தெண்டுல்கரும் குழந்தை நல மருத்துவர் அஞ்சலியும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர். தெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.


தெண்டுல்கர் மகள் சாராவுக்கு இப்போது 20 வயது ஆகிறது. கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சாராவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. படிப்பு முக்கியம் என்று தெண்டுல்கர் மறுத்து விட்டார். இப்போது படிப்பு முடிந்துவிட்டதால் இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சி செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

சாராவுக்கும் நடிக்க ஆசை இருப்பதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு வருகிறார். மாடர்ன் உடையில் தனது விதவிதமான படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். எனவே விரைவில் சாரா கதாநாயகியாக அறிமுகமாவார் என்று இந்தி பட உலகில் பேசப்படுகிறது.