சினிமா செய்திகள்

‘‘மலையாள நடிகர் சங்கத்தை உடைக்க சதியா?’’ –ரம்யா நம்பீசன், பத்மபிரியா மறுப்பு + "||" + "Do you want to break the Malayalam actor's association?" -Ramya Nambisan, Padmapriya denies

‘‘மலையாள நடிகர் சங்கத்தை உடைக்க சதியா?’’ –ரம்யா நம்பீசன், பத்மபிரியா மறுப்பு

‘‘மலையாள நடிகர் சங்கத்தை உடைக்க சதியா?’’ –ரம்யா நம்பீசன், பத்மபிரியா மறுப்பு
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் விவகாரத்தால் மலையாள நடிகர் சங்கத்துக்கும், நடிகைகள் அங்கம் வகிக்கும் சினிமா பெண்கள் கூட்டுக்குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
 மலையாள நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் ஆகியோர் ராஜினாமா செய்து விட்டனர்.  சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மோகன்லாலுக்கு எதிராக சங்கத்தை உடைக்க அதிருப்தியாளர்கள் முயற்சிப்பதாகவும், அவர்களுக்கு நடிகைகள் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுகுறித்து ரம்யா நம்பீசன் கூறியதாவது:–

‘‘மலையாள பட உலகை அழிக்கும் முயற்சியில் நானோ, நடிகைகள் அங்கம் வகிக்கும் சினிமா பெண்கள் சங்கமோ முயற்சிக்கவில்லை. சினிமா துறையில் நடிகைகளுக்கும் சம உரிமை வேண்டும். அதற்காகவே போராடுகிறோம். மலையாள சினிமா துறையில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து பேசி தீர்வுகாண விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். அந்த கூட்டத்தில் மோகன்லால் கருத்துக்கு பதில் அளிப்பது பற்றியும் முடிவு செய்யப்படும்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை பத்மபிரியா கூறியதாவது:–

‘‘சினிமா துறையில் பெண்களுக்கு எதிரான தொல்லைகள் நீண்ட காலமாக இருக்கிறது. அதற்காக இப்போதும் நாம் போராட வேண்டிய நிலைமை உள்ளது. நடிகர்களுக்கு உள்ள சுதந்திரம் நடிகைகளுக்கும் வேண்டும். மலையாள நடிகர் சங்கத்தை இரண்டாக உடைக்க முயற்சிக்கவில்லை. இன்னும் நான் நடிகர் சங்கத்தில்தான் இருக்கிறேன்.  சினிமா பெண்கள் சங்கம் சார்பில் எங்கள் கருத்துக்களை வெளியிடுகிறோம். நடிகர் கமல்ஹாசன் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.’’

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப்பை நீக்க மோகன்லால் மறுப்பு
மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப்பை நீக்க மோகன்லால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
2. வெள்ள நிவாரண பணிகளில் நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா, பார்வதி
கேரள வெள்ள நிவாரண பணிகளில் நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா, பார்வதி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
3. பாபி சிம்ஹா ஜோடி ரம்யா நம்பீசன்!
பாபி சிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
4. மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்க்க ரகசிய வாக்கெடுப்பு
நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர்.
5. திலீப்பை எதிர்க்கும் நடிகைகளுடன் மலையாள நடிகர் சங்கம் 7–ந் தேதி ஆலோசனை
மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் 7–ந் தேதி நடைபெறும் என்று மோகன்லால் அறிவித்து உள்ளார்.