சினிமா செய்திகள்

முன்னணி நடிகைகளின் லிஸ்டை கேட்டால் செத்தே விடுவீர்கள் - ஸ்ரீரெட்டி டுவிட் + "||" + Sri Reddy in Chennai to make series of explosions?

முன்னணி நடிகைகளின் லிஸ்டை கேட்டால் செத்தே விடுவீர்கள் - ஸ்ரீரெட்டி டுவிட்

முன்னணி நடிகைகளின் லிஸ்டை கேட்டால் செத்தே விடுவீர்கள் - ஸ்ரீரெட்டி டுவிட்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக உள்ள சிலர் வாயை திறந்து உண்மையை கூறினால், செத்தே விடுவீர்கள் என ஸ்ரீரெட்டி டுவிட் செய்து உள்ளார்.
ஐதராபாத்

நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தியதும் இந்திய பட உலகையே அதிர வைத்தது. நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதுகுறித்து மகளிர் ஆணையம் விசாரணையில் இறங்கி இருக்கிறது

இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவிலும் தன்னை ஏமாற்றியவர்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டு வருகிறார். டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், டைரக்டரும், நடிகருமான சுந்தர் சி ஆகியோர் பெயரையும் இப்போது சர்ச்சையில் இழுத்து இருக்கிறார் ஸ்ரீரெட்டி.

தொடர்ந்து ஸ்ரீரெட்டியின் பட்டியில் நீண்டுகொண்டே இருக்க, இணையத்தில் விமர்சனங்களும் எழுந்தன. இதற்கெல்லாம் ஆதாரம் உண்டா அல்லது போகிற போக்கில் அவர் கூறிச்செல்கிறார் என கேள்வியும் எழுந்தது.

இதை தொடர்ந்து  தனது பேஸ்புக் பதிவில் , “என்னை ஏமாற்றியவர்கள் பட்டியல் பெரியது என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. என்னுடைய பட்டியல் மிகவும் சிறியது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக உள்ள சிலர் வாயை திறந்து உண்மையை கூறினால், அவர்களை பயன்படுத்தியவர்களின் பட்டியலை கேட்டால், அதிர்ச்சியில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.