சினிமா செய்திகள்

ரூ.55 கோடிக்கு வீடு வாங்கிய நடிகர் ஷாகித் கபூர் + "||" + Rs 55 crore Home purchased Actor Shahid Kapoor

ரூ.55 கோடிக்கு வீடு வாங்கிய நடிகர் ஷாகித் கபூர்

ரூ.55 கோடிக்கு வீடு வாங்கிய நடிகர் ஷாகித் கபூர்
இந்தி நடிகர்-நடிகைகள் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். சொத்துக்களையும் வாங்கி குவிக்கிறார்கள்.
தொழில் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில் போன்றவற்றில் முதலீடு செய்தும் பணம் பார்க்கிறார்கள். அவர்கள் வசிக்கும் வீடுகள் மதிப்பை கேட்டால் தலை சுற்றும்.

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை திருமணம் செய்துள்ள அனுஷ்கா சர்மா சமீபத்தில் மும்பை ஒர்லி பகுதியில் ரூ.34 கோடிக்கு ஆடம்பர வீடு வாங்கினார். இந்த வீடு 70 அடுக்குமாடிகளை கொண்ட குடியிருப்பில் 7 ஆயிரத்து 171 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. வீட்டில் இருந்து கடல் அலையை பார்த்து ரசிக்கலாம்.


குடியிருப்பு வளாகத்தில் நீச்சல் குளம், கிரிக்கெட் மைதானம், டென்னிஸ் கோர்ட், குழந்தைகள் பூங்கா போன்றவைகள் உள்ளன.

இப்போது இந்தி நடிகர் ஷாகித் கபூரும் மும்பையில் ரூ.55.6 கோடிக்கு புதிய வீடு வாங்கி இருக்கிறார். புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 42-வது மற்றும் 43-வது தளங்களை சேர்த்து வாங்கி இருக்கிறார். இதற்காக 2.9 கோடிக்கு முத்திரை தாள் கட்டணம் செலுத்தி உள்ளார்.

இந்த வீடும் அனுஷ்கா வீடு வாங்கிய ஒர்லி பகுதியிலேயே அமைந்துள்ளது. இதில் மனைவி மீராவுடன் விரைவில் குடியேற இருக்கிறார். ஷாகித் கபூர் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தீபிகா படுகோனே ஜோடியாக நடித்து எதிர்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்து வசூல் குவித்த பத்மாவத் படம் அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.