சினிமா செய்திகள்

ரசிகர்கள் ஆவேசம் : வெளிநாட்டவரை இலியானா காதலிக்கலாமா? + "||" + Fans shouting: Iliyana is love at foreigner?

ரசிகர்கள் ஆவேசம் : வெளிநாட்டவரை இலியானா காதலிக்கலாமா?

ரசிகர்கள் ஆவேசம் : வெளிநாட்டவரை  இலியானா  காதலிக்கலாமா?
தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் மற்றும் கேடி படங்களில் நடித்தவர் இலியானா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
 ரவிதேஜா ஜோடியாக தெலுங்கில் இலியானா நடித்துள்ள அக்பர் அந்தோணி படம் திரைக்கு வர உள்ளது. இலியானாவுக்கும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரீவ் நீபோனுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.


நெருக்கமாக படம் எடுத்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வருகிறார்கள். இலியானா படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு ஆண்ட்ரீவ் தவறாமல் வந்து விடுகிறார். இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் வதந்தி பரவியது. இதுகுறித்து இலியானாவிடம் கேட்டபோது, ‘‘எனது சொந்த வாழ்க்கையை பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லை’’ என்றார்.

சமீபத்தில் ஆண்ட்ரீவ் பிறந்த நாளின்போது அவருடன் நெருக்கமாக இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ‘‘எப்படி வருடந்தோறும் மேலும் மேலும் கவர்ச்சியாக மாறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக உங்களுக்கு இருக்கப்போகிறது. அதில் நானும் இருக்கிறேன் என்று நினைக்கும்போது அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் அவர் கலந்துரையாடிய போது வெளிநாட்டை சேர்ந்தவரை காதலிக்கலாமா? என்று கேள்வி எழுப்பி பலரும் அவரை விமர்சித்தனர். அதற்கு பதில் அளித்த இலியானா, ‘‘நான் ஆண்ட்ரீவின் இதயத்தை காதலிக்கிறேன். அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் அவருக்கு என்ன நிறம் என்பதையெல்லாம் பார்த்து அவரை நான் காதலிக்கவில்லை’’ என்று கூறினார்.