சினிமா செய்திகள்

பிரபுதேவாவுடன் சாயிஷா நெருக்கம்? + "||" + Sayisha closer to Prabhu Deva

பிரபுதேவாவுடன் சாயிஷா நெருக்கம்?

பிரபுதேவாவுடன் சாயிஷா நெருக்கம்?
பிரபுதேவாவும் நடிகை சாயிஷாவும் நெருங்கி பழகுவதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன.
பிரபுதேவா மனைவியை விவாகரத்து செய்த பிறகு நயன்தாராவை திருமணம் செய்ய தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த திருமணம் ரத்தாகி விட்டது. பின்னர் இந்தி படங்கள் இயக்கும்போது இந்தி நடிகைகளுடனும் இணைத்து பேசப்பட்டார். 

இப்போது சல்மான்கானை வைத்து ‘தபாங்க்–3’ இந்தி படத்தை தயாரிக்கும் வேலையில் இருக்கிறார். தமிழில் 4 படங்களில் நடிக்கிறார். விஜய் இயக்கத்தில் நடித்துள்ள லட்சுமி படம் திரைக்கு வர தயாராக உள்ளது. சாயிஷா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். 

ஜெயம் ரவியுடன் வனமகன், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், ஆர்யா ஜோடியாக கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். சூர்யாவுடனும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி, சாயிஷா ஆகியோர் நடிக்க ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படம் தயாராவதாக இருந்தது. ஆனால் படவேலைகள் இன்னும் தொடங்கவில்லை. 

அந்த படம் நின்று போனதாகவும் பேசப்படுகிறது. அந்த பட அறிவிப்புக்கு பிறகு பிரபுதேவா–சாயிஷா இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் நெருங்கி பழகுவதாகவும் திரையுலகில் பேசப்படுகிறது. பிரபுதேவாவை போல் சாயிஷாவும் நடனத்தில் திறமையானவர்.

இரு தினங்களுக்கு முன்பு சாயிஷா சென்னையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது பிரபுதேவா நேரில் சென்று வாழ்த்தினார். நடிகைகளின் பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொள்ளாத பிரபுதேவா சாயிஷாவை வாழ்த்த வந்தது கவனிக்க வைத்தது.