சினிமா செய்திகள்

ரூ.1,000 கோடியில் தயாராகும்மகாபாரதம் படத்தில் அமீர்கான், பிரபாஸ் + "||" + Aamir Khan and Prabhas in the Mahabharata

ரூ.1,000 கோடியில் தயாராகும்மகாபாரதம் படத்தில் அமீர்கான், பிரபாஸ்

ரூ.1,000 கோடியில் தயாராகும்மகாபாரதம் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ரூ.1000 கோடி செலவில் மகாபாரதம் கதையை பல மொழிகளில் படமாக எடுக்கின்றனர்.
பாகுபலி வெற்றிக்கு பிறகு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்வை புராண, இதிகாச, சரித்திர கதைகள் பக்கம் திரும்பி இருக்கிறது. ராமாயண கதையை மையமாக வைத்து பாலகிருஷ்ணா, நயன்தாரா நடிப்பில் ஏற்கனவே ஸ்ரீராமராஜ்ஜியம் படம் தமிழ், தெலுங்கில் வந்தது. 

நாகார்ஜுனா, அனுஷ்கா நடிப்பில் ஓம் நமோ வெங்கடேசாய என்ற பெயரில் திருப்பதி வெங்கடாசலபதியின் திருவிளையாடல்களை சித்தரித்து பக்தி படம் வெளியானது. சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான பத்மாவத் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூலில் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சாதனை படைத்தது.

ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையும் படமாகி வருகிறது. இதில் லட்சுமிபாயாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். தெலுங்கில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் சைரா நரசிம்ம ரெட்டி என்ற சரித்திர படம் தயாராகிறது.

இந்த நிலையில் மகாபாரதம் கதையையும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் படமாக எடுக்கின்றனர். ரூ.1000 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது. இதில் கர்ணன், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன், துரியோதனன், சகுனி, திரவுபதி உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களுக்கு நடிகர்–நடிகைகள் தேர்வு நடக்கிறது. 

அமீர்கானை முக்கிய கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். அர்ஜுனன் வேடத்தில் நடிக்க பாகுபலி படம் மூலம் பிரபலமான பிரபாஸிடம் பேசி வருகிறார்கள்.