சினிமா செய்திகள்

“எனக்கு யாரும் போட்டி இல்லை” பட விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு + "||" + I do not have any competition In the film festival Sivakarthikeyan talks

“எனக்கு யாரும் போட்டி இல்லை” பட விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு

“எனக்கு யாரும் போட்டி இல்லை” பட விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு
சிவகார்த்திகேயன்-சமந்தா ஜோடியாக நடித்துள்ள புதிய படம் ‘சீமராஜா’. நெப்போலியன், சிம்ரன், சூரி ஆகியோரும் உள்ளனர்.
பொன்ராம் இயக்கி உள்ளார். 24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசியதாவது:-

“சீமராஜா படத்தின் டிரெய்லரில் கடைசி 3 காட்சிகளை பார்த்து சமூக வலைத்தளங்களில் பாகுபலி மாதிரி இருக்கிறது என்று பாராட்டுகள் கிடைத்தன. அது எங்களுக்கும், எங்கள் உழைப்புக்கும் கிடைத்த பெருமை. இந்த படத்தை விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்டிரைக் வந்தது.


அதையும் தாண்டி படத்தை குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுகள். படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினி முருகன் படத்தின்போதே இந்த யோசனை பற்றி பொன்ராமும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் அதிரடி காட்சிகளை குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். காமெடியும் நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன்”. இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

நடிகை சமந்தா விழாவில் பேசும்போது, “கிராமத்து படம் என்றாலே அது பொன்ராம், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் கோட்டை. அதில் எனக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய மொத்த குழுவுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்”.

நடிகை சிம்ரன், டைரக்டர் பொன்ராம், ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் இமான் ஆகியோரும் பேசினார்கள்.