சினிமா செய்திகள்

அறிவியல் தொடர்பான படம்சீ.வி.குமாரின் ‘ஜாங்கோ’ + "||" + CV Kumar's next film Jango

அறிவியல் தொடர்பான படம்சீ.வி.குமாரின் ‘ஜாங்கோ’

அறிவியல் தொடர்பான படம்சீ.வி.குமாரின் ‘ஜாங்கோ’
தமிழ் சினிமாவுக்கு பல புது டைரக்டர்களை அறிமுகப்படுத்தியவர், சீ.வி.குமார். இவர் அடுத்து தயாரிக்கும் படத்துக்கு, ‘ஜாங்கோ’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சதீஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாகவும், மிர்னாளினி கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், சந்தானபாரதி, சிவாஜி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

“இது, அறிவியல் சம்பந்தப்பட்ட கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது. டைரக்டர் அறிவழகனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த மனோ கார்த்திகேயன், இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார். படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். சீ.வி.குமார் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.