சினிமா செய்திகள்

‘சீதக்காதி’ படத்தில்80 வயதான நாடக கலைஞராக விஜய் சேதுபதி! + "||" + Vijay Sethupathi as 80-year-old

‘சீதக்காதி’ படத்தில்80 வயதான நாடக கலைஞராக விஜய் சேதுபதி!

‘சீதக்காதி’ படத்தில்80 வயதான நாடக கலைஞராக விஜய் சேதுபதி!
பிரபல கதாநாயகர்கள் அனைவருக்கும் ஒரு படம், அவர்களின் திரையுலக வாழ்க்கையில் மைல் கல்லாக அமையும். அப்படி விஜய் சேதுபதிக்கு அமைந்த படம்தான், ‘சீதக்காதி.’
‘சீதக்காதி’ படத்தில், அவர் 80 வயது நாடக கலைஞராக நடித்து இருக்கிறார். இதுபற்றி அவரே கூறிய தகவல்கள்:

‘‘சீதக்காதி, ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் அல்லது ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் போன்றவர்கள் நடிக்க வேண்டிய படம். இந்த படத்துக்காக டைரக்டர் பாலாஜி தரணிதரன் சில பிரபல கதாநாயகர்களை அணுகியபோது, அவர்கள் ‘கால்ஷீட்’ கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து அவர் என்னை தொடர்பு கொண்டார்.

இந்த படத்தில் நான் செய்ய வேண்டியதை மிக சரியாக செய்து இருக்கிறேன் என்று நம்புகிறேன். இது, ஒரு ஆத்மார்த்தமான படம். கலைக்கு முடிவே இல்லை. சாகாவரம் பெற்றது என்ற கருத்தை படம் சொல்லும். அது யாரோ ஒருவரின் அல்லது மற்றொருவரின் மூலம் வாழும். என் 25-வது படமாக, ‘சீதக்காதி’ அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி...பெருமை.’’

வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது.