சினிமா செய்திகள்

தனுசின் ‘ஹாலிவுட்’ படத்துக்கு சர்வதேச விருது + "||" + International Award for Tanushin 'Hollywood'

தனுசின் ‘ஹாலிவுட்’ படத்துக்கு சர்வதேச விருது

தனுசின் ‘ஹாலிவுட்’ படத்துக்கு சர்வதேச விருது
தமிழில் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கும் தனுஷ், ராஞ்சனா, ஷமிதாப் படங்கள் மூலம் இந்திக்கு போனார்.
தனுசின் ‘ஹாலிவுட்’ படத்துக்கு சர்வதேச விருது

தமிழில் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கும் தனுஷ், ராஞ்சனா, ஷமிதாப் படங்கள் மூலம் இந்திக்கு போனார். இப்போது ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர்’ என்ற படம் மூலம் ஹாலிவுட்டுக்கும் சென்றுள்ளார். இந்த படம் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாராகி உள்ளது. கென் ஸ்காட் இயக்கி உள்ளார்.

இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, லிபியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் ரிவியேராவில் நடந்த கேன்ஸ் பட விழாவில் திரையிட்டபோது தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

தற்போது நார்வே திரைப்பட விழாவில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர்’ படம் திரையிடப்பட்டு ‘த ரே ஆப் சன்சைன்’ என்ற சர்வதேச விருதை பெற்றுள்ளது. இதுகுறித்து டைரக்டர் கென் ஸ்காட் தனது டுவிட்டர் பக்கத்தில், “நார்வே சர்வதேச திரைப்பட விழாவில் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர்’ படம் திரையிடப்பட்டு சர்வதேச விருதை வென்றுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்படி இருந்தன என்றும், மனித மாண்புகள் குறித்து மிகவும் நேர்த்தியாக சொல்லப்பட்டு உள்ளது என்றும் தேர்வுக்குழுவினர் பாராட்டினார்கள்” என்று பதிவிட்டு உள்ளார்.

விருது கிடைத்ததை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த படம் தமிழில் ‘வாழ்க்கையை தேடி நானும் போனேன்’ என்ற பெயரில் வெளியாகிறது.