சினிமா செய்திகள்

‘‘மம்முட்டி நடித்த படம், ‘ரிலீஸ்’ தேதியில் மாற்றம் + "||" + Mammootty's film, Release date

‘‘மம்முட்டி நடித்த படம், ‘ரிலீஸ்’ தேதியில் மாற்றம்

‘‘மம்முட்டி நடித்த படம், ‘ரிலீஸ்’  தேதியில் மாற்றம்
ஆந்திர மாநில முன்னாள் முதல்– மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக மம்முட்டி நடித்துள்ள படத்தின் ‘ரிலீஸ்’ தேதி இப்போது மாற்றப்பட்டு இருக்கிறது.
அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளும், பிரபல நடிகைகளின் வாழ்க்கை வரலாறுகளும்  திரைப்படமாகி வருகின்றன. மறைந்த நடிகை ‘சில்க்’ சுமிதாவின் வாழ்க்கை வரலாறு, ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரிலும், சாவித்ரி வாழ்க்கை வரலாறு, ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் திரைப்படமாக வந்தன.

ஆந்திர மாநில முன்னாள் முதல்– மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறும் படமாகி வந்தது. ராஜசேகர ரெட்டியாக மம்முட்டி நடித்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகளும் நிறைவடைந்தன.

இதைத்தொடர்ந்து அந்த படத்தை பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டு வருவது என்று முடிவு செய்தார்கள். ஆனால், படத்தின் ‘ரிலீஸ்’ தேதி இப்போது மாற்றப்பட்டு இருக்கிறது. ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் அன்று டிசம்பர் 21–ந் தேதி, திரைக்கு கொண்டு வருவது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

அதே நாளில் மேலும் சில புதிய தெலுங்கு படங்களும் திரைக்கு வர உள்ளன. சாய்பல்லவி–சர்வானந்த் நடித்த ‘பாடி பாடி லெச்ச மனசு’ என்ற படமும், வருண் தேஜ்–சங்கல்ப் ரெட்டி நடித்த ‘அந்தாரிக்‌ஷம்’ என்ற படமும், ராஜசேகர ரெட்டி படத்துடன் மோத உள்ளன.