சினிமா செய்திகள்

சொர்க்கத்திலிருந்து கிடைத்த பரிசு மகள் குறித்து சன்னி லியோன் + "||" + Sunny Leone shares an adorable photo of daughter Nisha Kaur and husband Daniel Weber

சொர்க்கத்திலிருந்து கிடைத்த பரிசு மகள் குறித்து சன்னி லியோன்

சொர்க்கத்திலிருந்து கிடைத்த பரிசு மகள் குறித்து சன்னி லியோன்
தன்னுடைய மகள் சொர்க்கத்திலிருந்து கிடைத்த பரிசு என சன்னிலியோன் தெரிவித்துள்ளார்.
மும்பை,

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது இந்தியாவின் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். பொதுவாக குழந்தைகள் மீது ஆர்வம் கொண்ட இவர், குழந்தை பெற்றுக் கொள்ளாமல் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

அவருடை கணவர் டேனியல் வெபர் மற்றும் கரெஞ்ஜித் கவூர் வெப் சீரீஸ் தயாரிப்பாளருடன் சேர்ந்து விநாயகர் சதுர்த்தியை குதூகலமாகக் கொண்டாடினார். அப்போது சன்னிலியோனின் வளர்ப்பு மகள் நிஷா கவூர் பெற்றோருக்கு ஆசீர்வாதம் அளிப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி உள்ளது.

அந்த புகைப்படத்தை ட்வீட்டரில் பதிவிட்டுள்ள சன்னி, நிஷா கவூர் சொர்க்கத்திலிருந்த கிடைத்த பரிசு என பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

இந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அழைத்த கரெஞ்ஜித் கவூர் தயாரிப்பாளர் கிஷோர் அரோரா குடும்பத்திற்கு நன்றி தெரிவித்தும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

மேலும், இதுபோன்ற நிறைய நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், மகள் நீஷா கவூர் சிறுமியாக இருப்பதால் எல்லா இடத்திற்கும் அழைத்துச் செல்வது கடினமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.