சினிமா செய்திகள்

திருமணம் செய்ய வற்புறுத்தல்: காதலன் மீது நடிகை நிலானி போலீசில் புகார் காதலன் தீக்குளித்ததால் பரபரப்பு + "||" + Actress Nalini complains to police

திருமணம் செய்ய வற்புறுத்தல்: காதலன் மீது நடிகை நிலானி போலீசில் புகார் காதலன் தீக்குளித்ததால் பரபரப்பு

திருமணம் செய்ய வற்புறுத்தல்: காதலன் மீது நடிகை நிலானி போலீசில் புகார் காதலன் தீக்குளித்ததால் பரபரப்பு
திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி தகராறில் ஈடுபட்டதாக காதலன் மீது போலீசில் சின்னத்திரை நடிகை நிலானி புகார் செய்தார்.
அடையாறு, 

திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி தகராறில் ஈடுபட்டதாக காதலன் மீது போலீசில் சின்னத்திரை நடிகை நிலானி புகார் செய்தார். இதற்கிடையில் மனம் உடைந்த அவரது காதலன், தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான புகாரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குன்னூரில் பதுங்கி இருந்த நடிகை நிலானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த நிலானி, மீண்டும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில் அருகே நடைபெற்ற தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்று இருந்தார். அப்போது அங்கு வந்த அவருடைய காதலனான வளசரவாக்கத்தை சேர்ந்த காந்தி லலித்குமார், நிலானியிடம் திருமணம் குறித்து பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்பில் இருந்தவர்கள் காந்தி லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நடிகை நிலானி, மயிலாப்பூர் போலீஸ் நிலையம் சென்று, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் நடிகை நிலானியிடம் தகராறில் ஈடுபட்ட அவரது காதலன் காந்தி லலித்குமார், நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...