சினிமா செய்திகள்

‘துப்பாக்கி முனை’ படத்தில்33 என்கவுண்ட்டர்களை நடத்திய போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு! + "||" + Vikram Prabhu is a encounter police officer

‘துப்பாக்கி முனை’ படத்தில்33 என்கவுண்ட்டர்களை நடத்திய போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு!

‘துப்பாக்கி முனை’ படத்தில்33 என்கவுண்ட்டர்களை நடத்திய போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு!
விக்ரம் பிரபு நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், ‘துப்பாக்கி முனை.’
துப்பாக்கி முனை படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருப்பவர், தினேஷ் செல்வராஜ். இவர், பிரபல கதாசிரியர்-வசனகர்த்தா-டைரக்டர் ஆர்.செல்வராஜின் மகன். ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரித்து இருக்கிறார். ‘துப்பாக்கி முனை’ படத்தை பற்றி டைரக்டர் தினேஷ் செல்வராஜ் சொல்கிறார்:-

‘‘ராமாயணத்தில் ராவணனை சம் ஹாரம் செய்தவர், ராமன், மகாபாரத த்தில் துரியோதனனை சம்ஹாரம் செய்தவர், கிருஷ்ணன். இவர்களைப் போல் இன்றைய சமூகத்தில், கெட்டவர்கள் அதிக மாகி விட்டார்கள். அவர்களை சம் ஹாரம் செய்ய கடைசியாக கல்கி அவதாரம் எடுக்கிறார், பெருமாள். அந்த கல்கி அவதாரம் போல் இந்த கதையின் நாயகன் பிர்லா போஸ், 33 என் கவுண்ட்டர்களை நடத்தி ரவுடிகளுக்கும், தாதாக்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.

படத்தில், என்கவுண்ட்டர் அதிகாரி பிர்லா போசாக விக்ரம் பிரபு நடித்து இருக்கிறார். பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பணியில் இருக்கும் அதிகாரி மைதிலியாக ஹன்சிகா வருகிறார். எல்.வைத்யநாதனின் மகன்கள் எல்.வி.முத்து-கணேஷ் இசையமைக்க, கவிஞர் அறிவுமதியின் மகன் ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை, மதுரை, ராமேசுவரம், தனுஷ்கோடி, மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.’’

தொடர்புடைய செய்திகள்

1. துப்பாக்கி முனை
ஒரு கற்பழிப்பு குற்றமும், என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியும். படம் "துப்பாக்கி முனை" கதாநாயகன் விக்ரம் பிரபு, கதாநாயகி ஹன்சிகா, டைரக்‌ஷன் தினேஷ் செல்வராஜ் சினிமா விமர்சனம்.
2. துப்பாக்கி முனை
தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `துப்பாக்கி முனை’ படத்தின் முன்னோட்டம்.
3. ‘துப்பாக்கி முனை’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்
‘துப்பாக்கி முனை’ படத்துக்கு யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.