சினிமா செய்திகள்

‘உறியடி’ டைரக்டர் இயக்கசூர்யா தயாரிப்பில் மேலும் ஒரு புதிய படம் + "||" + A new film in Suriya's production

‘உறியடி’ டைரக்டர் இயக்கசூர்யா தயாரிப்பில் மேலும் ஒரு புதிய படம்

‘உறியடி’ டைரக்டர் இயக்கசூர்யா தயாரிப்பில் மேலும் ஒரு புதிய படம்
நடிகர் சூர்யாவின் 2 டி நிறுவனம் ஒரு புதிய படம் தயாரிக்கிறது.
வெள்ளித்திரையில் அர்த்தமுள்ள திரைப் படங்கள் உருவாக ஊக்கம் அளிப் பதற்காக, நடிகர் சூர்யா தனது மகள்-மகன் பெயர்களில், 2 டி என்ற பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் சார்பில் ‘36 வயதினிலே,’ ‘பசங்க-2,’ ‘24,’ ‘மகளிர் மட்டும்,’ ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் தயாராகி வெளிவந்தன. தொடர்ந்து சமூக நலனை கருத்தில் கொண்டு 2 டி நிறுவனம் படங்களை தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளது.

அதன்படி, 2 டி நிறுவனம் அடுத்து ஒரு புதிய படம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. ‘உறியடி’ படத்தை இயக்கிய விஜய்குமார் டைரக்டு செய்கிறார். ‘உறியடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இவர், சூர்யாவின் 2 டி நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிவது, எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

‘உறியடி’ படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் விஜய்குமார் கதை நாயகனாக நடிக்கிறார். நாயகியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ் மயா அறிமுகம் ஆகிறார். ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ‘உறியடி’ யில் நடித்த ஷங்கர் தாஸ், அப்பாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விஜய் சேதுபதி-திரிஷா நடித்துள்ள ‘96’ படத் துக்கு இசையமைத்த கோவிந்த் மேனன் இசை யமைக்கிறார். ‘உறியடி’ படத்தில் இணை ஒளிப்பதி வாளராக பணியாற்றிய பிரவீன் குமார், இந்த படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார்.

சமூகத்துக்கு தேவையான ஒரு கருத்துடன் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து படம் தயாராவதாகவும், குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் டைரக்டர் விஜய்குமார் தெரிவித்தார்.