சினிமா செய்திகள்

மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்த விக்ரம் + "||" + Vikram introduced his son as hero

மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்த விக்ரம்

மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்த விக்ரம்
நடிகர் விக்ரம் மகன் துருவ், ‘வர்மா’ படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்த படத்தை பாலா இயக்கி உள்ளார். கதாநாயகியாக மேகா நடித்துள்ளார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘அர்ஜுன்ரெட்டி’ படத்தின் தமிழ் பதிப்பாக ‘வர்மா’ உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்து பேசினார். அவர் கூறும்போது, ‘‘இயக்குனர் பாலா தனது படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவரது இயக்கத்தில் எனது மகன் துருவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்’’ என்றார்.


துருவ் பேசும்போது, ‘‘நான் நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். குறிப்பாக எனது தந்தை விக்ரம் நடிக்கும் படங்களை இரண்டு மூன்று தடவை கூட பார்ப்பது உண்டு. எனது தந்தைக்கு நான் தீவிர ரசிகன். சேது படத்தில் எனது தந்தை நடிப்புக்கு இயக்குனர் பாலா உயிர் கொடுத்து இருந்தார். அதே போல வர்மா படத்திலும் எனது நடிப்புக்கு அவர் உயிர் கொடுத்து இருக்கிறார். இந்த படத்தை பாலா இயக்காமல் இருந்திருந்தால் நான் நடிக்கவே வந்து இருக்க மாட்டேன்’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் மலையாளத்தில், விக்ரம்!
விக்ரம் ஆரம்ப காலத்தில், பல மலையாள படங்களில் நடித்தார். ‘சேது’ படத்துக்கு முன்பு அவருக்கு மலையாள பட உலகம்தான் கைகொடுத்தது.
2. சரித்திர கதையில் விக்ரம்?
விக்ரம் நடிப்பில் இந்த வருடம் ஸ்கெட்ச், சாமி–2 ஆகிய படங்கள் வந்தன.