சினிமா செய்திகள்

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி ”ஒரு நிமிடம் உயிரே போய்விட்டு வந்தது என உருக்கம்” + "||" + Karthi’ Dev team stranded in Kullu Manali floods

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி ”ஒரு நிமிடம் உயிரே போய்விட்டு வந்தது என உருக்கம்”

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி ”ஒரு நிமிடம் உயிரே போய்விட்டு வந்தது என உருக்கம்”
குலு, மணாலியில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவை பார்த்து ஒரு நிமிடம் உயிரே போய்விட்டது என்று நடிகர் கார்த்தி உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
மணாலி,

தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி சேர்ந்துள்ள படம் தேவ். படத்தின் சில காட்சிகளை படமாக்க கார்த்தி மற்றும் 150 பேர் அடங்கிய குழு குலு, மணாலிக்கு புறப்பட்டு சென்றது. 

இந்நிலையில் குலு, மணாலியில் கனமழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கார்த்தியின் தேவ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.  

இந்தநிலையில், நடிகர் கார்த்தி கூறியிருப்பதாவது:

நேற்று திடீர் என்று குலு, மணாலியில் நிலைமை மோசமாகிவிட்டது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் கார், பேருந்து என பல அடித்துச் செல்லப்பட்டது.

மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு ஓடியதை என் கண்ணால் பார்த்தேன். இதை எல்லாம் பார்த்து ஒரு நிமிடம் உயிரே போய்விட்டு வந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் காரில் இருந்த நான் பத்திரமாக கிராமத்திற்கு வந்துவிட்டேன். படக்குழுவினரின் நிலையை நினைத்தால் கவலையாக உள்ளது. அவர்கள் எங்கே தங்கி, சாப்பிடுவார்கள் என்று தெரியவில்லை.  படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர் லக்ஷ்மணனுக்கு ரூ. 1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் கடும் வெள்ளம்; பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் கனமழையால் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
2. காரைக்குடி பகுதியில் பலத்த மழை சாலைகளில் வெள்ளம் போல் ஓடிய மழைநீர்
காரைக்குடி பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
3. ராமேசுவரத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார்
ராமேசுவரத்தில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் மணிகண்டன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
4. எட்டயபுரத்தில் பலத்த மழை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
எட்டயபுரத்தில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
5. மழைக்கு தாங்காத மதுரை: கண்மாய்களில் உடைப்பு; வீடுகளில் வெள்ளம் புகுந்தது
மதுரையில் பெய்த மழையால் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு, வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.