சினிமா செய்திகள்

அழகை விட திறமையை விரும்பும் தமன்னா + "||" + Talent than looks Wishing Tamanna

அழகை விட திறமையை விரும்பும் தமன்னா

அழகை விட திறமையை விரும்பும் தமன்னா
சினிமாவில் நீடிப்பதற்கு அழகை விட திறமை முக்கியம் என்கிறார் தமன்னா.
தமன்னா நடித்து கடந்த வருடம் ‘ஸ்கெட்ச்’ படமும் தெலுங்கில் ‘நா நூவே’ படமும் வந்தன. தமிழ், தெலுங்கில் தயாராகும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவியுடன் இப்போது நடிக்கிறார். சினிமாவில் நீடிப்பதற்கு அழகை விட திறமை முக்கியம் என்கிறார் தமன்னா. இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:–

‘‘அந்தக் காலத்தில் அஞ்சலி தேவி, சாவித்திரி, பண்டரிபாய், ஜமுனா, பானுமதி போன்ற நடிகைகள் 30 ஆண்டுகள், 40 ஆண்டுகள் என்று சினிமாவில் நீடித்தனர். அதற்கு காரணம் அவர்களின் திறமை. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு முகபாவனைகள் காட்டி நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதால் ரொம்ப காலம் நடித்தனர். 

அப்போதெல்லாம் நடிகைகளுக்கு பெரிய மரியாதை இல்லை. ஆனால் இப்போது நடிகைகளை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். சினிமா தொழிலை நடிகைகள் சேவையாக செய்யவில்லை. சம்பளம் வாங்கித்தான் நடிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூடுகிறார்கள். ஆட்டோகிராப் கேட்கிறார்கள். கைகுலுக்க ஆசைப்படுகிறார்கள். 

தொலைவில் நின்று கையசைக்கும்போது பதிலுக்கு நடிகைகள் கையசைத்தால் அதை பெரிய சந்தோ‌ஷமாக கொண்டாடுகிறார்கள். நடிகைகளுக்கு பெரிய மரியாதை இருக்கிறது. இன்று சினிமாவில் நடிகைகள் ரொம்ப நாள் நீடிப்பது அபூர்வம். திறமை இல்லாவிட்டால் ஒதுக்கி விடுவார்கள். நான் 10 வருடங்களாக சினிமாவில் இருப்பதற்கு திறமைதான் காரணம். அழகை நான் நம்பவில்லை. திறமையை நம்புவதால்தான் வாய்ப்புகள் வருகிறது. அழகு சினிமாவில் அறிமுகமாக உதவலாம். ஆனால் இங்கு நீடிக்க வேண்டுமானால் நடிப்பு திறமை அவசியம். நிறைய நடிகைகள் அழகை மட்டுமே நம்பி வருவதால் நிலைப்பது இல்லை’’

இவ்வாறு தமன்னா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘காதல்’ என்றதும் கடுப்பான நாயகி!
தமிழ், தெலுங்கு என 2 மொழி படங்களிலும் பிரபல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர், தமன்னா.
2. ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க விரும்பும் தமன்னா
நடிகர்-நடிகைகள் வாழ்க்கை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. ஏற்கனவே சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து வித்யாபாலன் நடிப்பில் வெளியான ‘தி டர்டி பிக்சர்’ இந்தி படம் நல்ல வசூல் பார்த்தது.
3. நடிக்க வராவிட்டால், டாக்டர்!
தென்னிந்திய திரையுலகில் உள்ள முக்கிய கதாநாயகிகளில் ஒருவர், தமன்னா. இவர் ஏறக்குறைய எல்லா பிரபல கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார்.
4. “படங்கள் ரசிகர்களை அழவைக்க கூடாது” நடிகை தமன்னா பேட்டி
தமன்னா நடித்த ‘தேவி-2’ படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. மேலும் 3 தெலுங்கு படங்களிலும், ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார்.
5. டாப்சி நடித்த வேடத்தில், தமன்னா!
டாப்சி கதாநாயகியாக நடித்த வேடத்தில், தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.