பொழிச்சலூர் காட்டுப்பகுதியில் ‘பாகுபலி’ வில்லனுடன் பிரபுதேவா மோதல்
‘பாகுபலி’ வில்லனுடன் பிரபுதேவா மோதிய காட்சி ‘யங் மங் சங்’ படத்துக்காக படமாக்கப்பட்டது.
பிரபுதேவா கதாநாயகனாக நடித்து வரும் ‘யங் மங் சங்’ படத்தின் படப்பிடிப்பு 85 சதவீதம் நடைபெற்று முடிவடைந்தது. இதில், அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் தங்கர்பச்சான், சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், காளி வெங்கட், முனீஷ்காந்த், மாரிமுத்து ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்த பிரபாகர், இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.
பிரபுதேவா, குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். இளைஞர்களுக்கு பல்வேறு சண்டைகளை கற்றுக் கொடுப்பவராக பிரபாகர் வருகிறார். இருவரும் மோதுகிற சண்டை காட்சியை பொழிச்சலூர் காட்டுப்பகுதியில், 7 நாட்கள் படமாக்கினார்கள்.
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கிறார். கதை–திரைக் கதை–வசனம் எழுதி அர்ஜுன் எம்.எஸ். டைரக்டு செய்கிறார். கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். ‘‘குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்க் கும் வகையில், ‘யங் மங் சங்’ ஜனரஞ்சகமான படமாக இருக்கும்’’ என்று டைரக்டர் அர்ஜுன் எம்.எஸ். கூறினார்.
Related Tags :
Next Story