சினிமா செய்திகள்

‘ஆல்பம்’ தயாரிக்கிறார், சுருதிஹாசன் + "||" + Album is produced by Shruthi Hassan

‘ஆல்பம்’ தயாரிக்கிறார், சுருதிஹாசன்

‘ஆல்பம்’ தயாரிக்கிறார், சுருதிஹாசன்
திரைப்பட நடிகை, இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் என்று பன்முகம் கொண்டவர், சுருதிஹாசன்.
சுருதிஹாசனும், வெளிநாட்டு இசையமைப்பாளர் நியூகிலியாவும் சேர்ந்து ஒரு ‘ஆல்பம்’ தயாரித்து இருக்கிறார்கள். இந்த ஆல்பத்தின் வெளியீடு அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெற இருக்கிறது.

இதுபற்றி சுருதிஹாசன் கூறும்போது, ‘‘நியூகிலியா, மிகப்பெரிய இசைக்கலைஞர். அவருடன் இணைந்து ஆல்பத்தை தயாரித்ததில் பெருமைப்படுகிறேன். நியூகிலியா, இசை துறையில் பல சாதனைகள் புரிந்தவர். திறமையானவர். ஆல்பம் தயாரித்ததில், அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதை என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்’’ என்கிறார், சுருதிஹாசன்.

நியூகிலியா சொல்லும்போது, ‘‘சுருதிஹாசன் இசை ஞானம் மிகுந்தவர். அவருடன் இணைந்து ஆல்பம் தயாரித்ததில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஒரு திரைப்பட நடிகையாக, பாடகியாக, இசையமைப்பாளராக சுருதிஹாசன் திறமையானவர். ஆல்பத்தின் அனைத்து பாடல்களையும் சுருதிஹாசன் எழுதியிருக்கிறார். ஆல்பம் வெளிவரும்போது, அவர் பேசப்படுவார்’’ என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...