கேரள வெள்ள நிவாரணத்துக்கு கலை நிகழ்ச்சி நடிகர்–நடிகைகள் ரூ.5 கோடி திரட்ட முடிவு


கேரள வெள்ள நிவாரணத்துக்கு கலை நிகழ்ச்சி நடிகர்–நடிகைகள் ரூ.5 கோடி திரட்ட முடிவு
x
தினத்தந்தி 9 Oct 2018 10:45 PM GMT (Updated: 9 Oct 2018 5:40 PM GMT)

வெள்ள நிவாரண நிதி திரட்ட மலையாள நடிகர், நடிகைகள் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பேரழிவு ஏற்பட்டு மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கினார்கள். இப்போது அவர்கள் வீடு திரும்பி இருக்கிறார்கள். வெள்ளத்தில் சிக்கி 483 பேர் உயிர் இழந்ததாகவும், 140 பேரை காணவில்லை என்றும் கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

நடிகர்–நடிகைகள் பலர் வெள்ள நிவாரண நிதி வழங்கி உள்ளனர். அடுத்து, வெள்ள நிவாரண நிதி திரட்ட மலையாள நடிகர், நடிகைகள் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். கொச்சியில் மோகன்லால் தலைமையில் நடந்த மலையாள நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து மலையாள நடிகர் சங்க பொருளாளர் ஜகதீஷ் கூறும்போது, ‘‘வெள்ள நிவாரண நிதி திரட்ட டிசம்பர் மாதம் 7–ந் தேதி அபுதாபியில் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்–நடிகைகள் கலந்துகொள்கிறார்கள். இதன்மூலம் ரூ.5 கோடி நிதி திரட்டி முதல்–மந்திரியிடம் வழங்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார். 

கலைநிகழ்ச்சியில் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், நிவின்பாலி, பஹத் பாசில் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பங்கேற்கின்றனர். நயன்தாரா, அமலாபால், ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பத்மபிரியா, மம்தா மோகன்தாஸ், நஸ்ரியா உள்ளிட்ட மலையாள நடிகைகளையும் அழைக்க உள்ளனர்.

Next Story