சினிமா செய்திகள்

போதை பொருள் கொடுத்து பலாத்காரம்‘மீ டூ’ வில் சிக்கிய மேலும் 2 டைரக்டர்கள் + "||" + MeToo M to do Entrapments 2 more directors

போதை பொருள் கொடுத்து பலாத்காரம்‘மீ டூ’ வில் சிக்கிய மேலும் 2 டைரக்டர்கள்

போதை பொருள் கொடுத்து பலாத்காரம்‘மீ டூ’ வில் சிக்கிய மேலும் 2 டைரக்டர்கள்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை ‘மீ டூ’வில் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்தி நடிகர் அலோக்நாத் மதுவில் போதை பொருள் கலந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பெண் டைரக்டர் வின்டா நந்தா குற்றம் சாட்டினார். 

இதுபோல் பிரபல இந்தி நடிகர் சுபாஷ் கையும் மதுவில் போதை பொருள் கலந்து தன்னை கற்பழித்து விட்டதாக இன்னொரு பெண் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

‘‘பல ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷ் கை இயக்கிய படத்தில் நான் பணியாற்றினேன். அப்போது மெதுவாக எனது தொடையில் கைபோட தொடங்கினார். கதை விவாதத்துக்காக அவர் தங்கி இருந்த அபார்ட்மென்டுக்கு அழைத்து அழுவதுபோல் நடித்து எனது மடியில் தலை வைத்தார். 

ஒரு நாள் எனக்கு மதுவில் போதை பொருளை கலந்து ஓட்டலுக்கு அழைத்து சென்று உடையை கழற்றினார். நான் கூச்சல்போட முயன்றபோது வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இப்போதுதான் அந்த கொடுமை பற்றி பேச எனக்கு துணிச்சல் வந்துள்ளது.’’

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதுபோல் பிரபல இந்தி டைரக்டர் சஜீத்கான் மீது நடிகை சலோனி சோப்ரா தெரிவித்துள்ள பாலியல் புகாரில், ‘‘அவரிடம் உதவி இயக்குனராக நான் பணியாற்றியபோது என்னை ஆசைநாயகியாக இருக்கும்படி வற்புறுத்தினார். தினமும் பாலியல் தொந்தரவு கொடுத்தார்’’ என்று கூறி உள்ளார்.

இதனால் சஜித்கான் இயக்க உள்ள ஹவுஸ்புல்–4 என்ற படத்தில் நடிக்க மறுத்து அக்‌ஷய்குமார் விலகினார். எனவே அந்த படம் தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.