சினிமா செய்திகள்

சரித்திர கதையில், விஜய் சேதுபதி + "||" + Historical story, Vijay Sethupathi

சரித்திர கதையில், விஜய் சேதுபதி

சரித்திர கதையில், விஜய் சேதுபதி
‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற சரித்திர படத்தில் விஜய் சேதுபதி தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
விஜய் சேதுபதி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வருகிறார். திருடன், ரவுடி, தாதா, போலீஸ் அதிகாரி, டாக்டர் என்றெல்லாம் நடித்துள்ளார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக வருகிறார். அந்த தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். 

சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘96’ படத்தில் காதலில் தோல்வி அடைந்தவராக நடித்துள்ளார். இந்த படமும் வரவேற்பை பெற்றது. பலரும் அவரது நடிப்பை பாராட்டினார்கள். இப்போது சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடித்து வருகிறார். 

சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இதில் ரேணாட்டி சூரியடு என்ற வீரன் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி ஏற்றுள்ளார். படத்தில் வரும் அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதை ரசிகர்கள் பாராட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். 

ரஜினிகாந்தின் பேட்ட படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கிறார். சீதக்காதி, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களிலும் நடிக்கிறார். சீதக்காதி படத்தில் வயதான முதியவராக நடிக்கிறார்.