சினிமா செய்திகள்

நடிகை சுஜா வருணி காதல் திருமணம்சிவாஜியின் பேரனை மணக்கிறார் + "||" + Actress Suja Varuni Love marriage

நடிகை சுஜா வருணி காதல் திருமணம்சிவாஜியின் பேரனை மணக்கிறார்

நடிகை சுஜா வருணி காதல் திருமணம்சிவாஜியின் பேரனை மணக்கிறார்
நடிகை சுஜா வருணிக்கும், சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவுக்கும் சென்னையில், நவம்பர் 19-ந்தேதி திருமணம் நடக்கிறது.
சென்னை,

‘பிளஸ்2’ என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் சுஜா வருணி. மிளகா, பென்சில், கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை உள்பட பல படங்களில் கவர்ச்சி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

இவருக்கும், ‘சிங்ககுட்டி’ படத்தில் கதாநாயகனாக நடித்த சிவாஜி தேவுக்கும் காதல் இருந்து வந்தது. சிவாஜி தேவ், ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் ஆவார்.

திருமணம்

சுஜா வருணி-சிவாஜி தேவ் திருமணம் அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந்தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது.

முன்னதாக கடந்த வாரம் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி

காதல் திருமணம் செய்து கொள்வது பற்றி நடிகை சுஜா வருணி பேட்டியில் கூறியதாவது:-

‘நானும், சிவாஜி தேவும் 12 வருடங்களுக்கு முன்பு சந்தித்தோம். முதலில் நட்பாக பழக ஆரம்பித்த நாங்கள் பின்னர் காதலர்களாக மாறினோம். இருவரும் 12 வருடங்களாக காதலித்து வந்தோம்.

எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சமீபத்தில்தான் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்குப் பின் நடிப்பேனா? மாட்டேனா? என்ற கேள்விக்கே அவசியம் இல்லை.

நான் தொடர்ந்து நடிப்பேன். நான் தொடர்ந்து நடிப்பதற்கு எனது காதலரும், வருங்கால கணவருமான சிவாஜி தேவ் அனுமதி கொடுத்து இருக்கிறார்’.

இவ்வாறு அவர் கூறினார்.