மலையாள நடிகர் சங்கத்துக்கு திலீப் ரூ.5 கோடி கொடுத்ததால் நீக்க மறுப்பா?


மலையாள நடிகர் சங்கத்துக்கு திலீப் ரூ.5 கோடி கொடுத்ததால் நீக்க மறுப்பா?
x
தினத்தந்தி 16 Oct 2018 10:45 PM GMT (Updated: 16 Oct 2018 5:34 PM GMT)

கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைத்து இருந்தனர்.

மோகன்லால் சங்கத்துக்கு தலைவரானதும் பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி திலீப்பை மீண்டும் சேர்த்துக்கொண்டார். இதற்கு நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ், பாவனா ஆகியோர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தனர். திலீப்பை சங்கத்தில் சேர்க்க கூடாது என்றும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் மலையாள சினிமா பெண் கலைஞர்கள் சங்கத்தினர் வற்புறுத்தினர்.

நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோர் கொச்சியில் நிருபர்களை சந்தித்து திலீப்பை சங்கத்தில் வைத்திருக்க மோகன்லால் விரும்புகிறார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை போய் விட்டது என்றனர். இந்த நிலையில் நடிகர் சங்க செயலாளர் சித்திக், நடிகை லலிதா ஆகியோர் பெண்கலைஞர்கள் சங்கத்தினர் நடிகர் சங்கத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் திலீப் ஏற்கனவே சங்கத்துக்கு ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார் என்றும் கூறினர்.

ராஜினாமா ஏற்கப்பட்டதா? என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மோகன்லால் ஆதரவாளரான நடிகர் மகேஷ் கூறும்போது ‘‘மலையாள நடிகர் சங்கத்துக்கு திலீப் ரூ.5.5 கோடி நன்கொடை கொடுத்து இருக்கிறார். எனவே அவருக்கு சாதகமாக செயல்படுவதில் என்ன தவறு இருக்கிறது’’ என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story