சினிமா செய்திகள்

‘‘மீ டூவை தவறாக பயன்படுத்த கூடாது’’ – நடிகை ரகுல் பிரீத்சிங் + "||" + Do not misuse metoo - actress Rukul Prith Singh

‘‘மீ டூவை தவறாக பயன்படுத்த கூடாது’’ – நடிகை ரகுல் பிரீத்சிங்

‘‘மீ டூவை தவறாக பயன்படுத்த கூடாது’’ – நடிகை ரகுல் பிரீத்சிங்
தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத்சிங்.
ரகுல் பிரீத்சிங் இப்போது சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். ‘மீ டூ’ இயக்கம் குறித்து ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:–

‘‘நாடு முழுவதும் ‘மீ டூ’ இயக்கம் பற்றி பரவலாக பேசி வருகிறார்கள். நான் லுவ் ராஜன் தயாரிக்கும் தி தி பியார் தி என்ற இந்தி படத்தில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறேன். லுவ் ராஜன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் நல்லவர்.


எது தவறு, எது சரி என்று சொல்ல விரும்பவில்லை. ஒரு பெண்ணை கற்பழிப்பதற்கும் பாலியல் ரீதியாக பயன்படுத்த வற்புறுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது.  எது உண்மை, எது பொய் என்று ஆராய வேண்டும். பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் அதிகமாக வெளியே தெரிவது இல்லை. பாலியல் தொந்தரவுகளை அம்பலப்படுத்த தைரியம் வேண்டும்.

இப்போது நிறைய பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசி வருகிறார்கள். அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு. ‘மீ டு’ இயக்கம் மக்கள் மத்தியில் கவனம் பெற்று இருப்பது மகிழ்ச்சி. ஆனால் மீ டூ வை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது’’

இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.