சினிமா செய்திகள்

‘வைரமுத்து கண்ணியமானவர்’ சின்மயி பாலியல் புகாருக்கு குஷ்பு எதிர்ப்பு + "||" + 'Vairamuthu Dignified' Tsunami Against Sexual Complaint

‘வைரமுத்து கண்ணியமானவர்’ சின்மயி பாலியல் புகாருக்கு குஷ்பு எதிர்ப்பு

‘வைரமுத்து கண்ணியமானவர்’
சின்மயி பாலியல் புகாருக்கு குஷ்பு எதிர்ப்பு
நடிகை குஷ்பு, “எனது வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் வைரமுத்து, கண்ணியமான மனிதர்களில் ஒருவர்” என்றார்.
கவிஞர் வைரமுத்து மீது சினிமா பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். வெளிநாட்டுக்கு இசை நிகழ்ச்சி நடத்த சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறினார். இதனை வைரமுத்து மறுத்தார். சின்மயி வழக்கு போட்டால் சந்திக்க தயார் என்றும் கூறினார்.

சின்மயி கூறும்போது, “வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை. அந்த கால கட்டம் எது என்பதற்கான ஒரே ஆதாரம் எனது பாஸ்போர்ட். 10 வீடு மாறிவிட்டதால் அந்த பாஸ்போர்ட் எங்கே போனது என்று தெரியவில்லை. அதை தேடுகிறேன். பாஸ்போர்ட் கிடைத்ததும் வைரமுத்து மீது புகார் அளிப்பேன்” என்றார்.

தனியார் டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நடிகை குஷ்புவிடம் சின்மயி பாலியல் புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த குஷ்பு, “எனது வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் வைரமுத்து, கண்ணியமான மனிதர்களில் ஒருவர்” என்றார்.

காங்கிரசுடன் கமல்ஹாசன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த குஷ்பு, “தி.மு.க.வுடன் கூட்டணி உடையும் என்று கமல்ஹாசன் சொல்வது அவரது சொந்த கருத்து. காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார் என்றும் அவர்தான் சொல்கிறார். காங்கிரஸ் சார்பில் தி.மு.க.வுடன் கூட்டணி முறிவு என்றோ கமல்ஹாசனுடன் கூட்டணி என்றோ சொல்லவில்லை. கமல்ஹாசன் எங்களிடம் வந்தால் நிச்சயம் வரவேற்போம்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. சர்கார் படத்துக்கு எதிராக கையை முறுக்குவதா? நடிகை குஷ்பு, விஷால் கண்டனம்
சர்கார் படத்துக்கு எதிராக கையை முறுக்குவதா? என்று நடிகை குஷ்புவும் நடிகர் விஷாலும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
2. ரஜினி கட்சியில் சேர முடிவா? நடிகை குஷ்பு விளக்கம்
ரஜினி கட்சியில் சேர முடிவா? என்ற கேள்விக்கு நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.