சினிமா செய்திகள்

முதல் முறையாக மகளின் படத்தை வெளியிட்ட அசின் + "||" + Asin released the daughter Picture

முதல் முறையாக மகளின் படத்தை வெளியிட்ட அசின்

முதல் முறையாக மகளின் படத்தை வெளியிட்ட அசின்
நடிகை அசின் தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
தமிழில் உள்ளம் கேட்குமே, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சிவகாசி, கஜினி, மஜா, காவலன் உள்பட பல படங்களில் நடித்தவர் அசின். முன்னணி நடிகர்களான விஜய், அஜித்குமார், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கேரளாவை சேர்ந்த இவர் மலையாள பட உலகிலும் பிரபல நடிகையாக இருந்தார்.

கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்தபோது அமீர்கான் ஜோடியாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால் அவருக்கு இந்தி படங்கள் குவிந்தன. சல்மான்கான், அக்‌ஷய்குமார், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். ஹவுஸ்புல்-2 படத்தில் நடித்தபோது அக்‌ஷய்குமாரின் நண்பரும், மைக்ரோ மேக்ஸ் நிறுவனருமான ராகுல் சர்மாவுடன் காதல் மலர்ந்தது.

இருவரும் 2016-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு அசின் சினிமாவில் நடிக்கவில்லை. அவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அரின் என்று பெயர் சூட்டினர். ஆனாலும் குழந்தையின் புகைப்படத்தை வெளிஉலகுக்கு இதுவரை காட்டாமலேயே இருந்தனர். குழந்தை எப்படி இருக்கும் என்று அறியும் ஆவலில் ரசிகர்களும் காத்து இருந்தனர்.

இந்த நிலையில் குழந்தையின் முதல் பிறந்த நாளை குடும்பத்தினர் கொண்டாடினார்கள். இதைத்தொடர்ந்து முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அசின் வெளியிட்டு உள்ளார். அந்த படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.