சினிமா செய்திகள்

அதிக புத்திசாலியாக இருக்கிறாய் என கூறி படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்க மறுத்த இயக்குநர்; நடிகை ஸ்வரா பாஸ்கர் + "||" + When Swara Bhasker was rejected by a director for 'looking intelligent'

அதிக புத்திசாலியாக இருக்கிறாய் என கூறி படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்க மறுத்த இயக்குநர்; நடிகை ஸ்வரா பாஸ்கர்

அதிக புத்திசாலியாக இருக்கிறாய் என கூறி படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்க மறுத்த இயக்குநர்; நடிகை ஸ்வரா பாஸ்கர்
புத்திசாலியாக தெரிந்ததால் படத்தில் நடிக்க எனக்கு இயக்குநர் ஒருவர் வாய்ப்பு மறுத்தார் என நடிகை ஸ்வரா பாஸ்கர் கூறியுள்ளார்.
மும்பை,

இந்தி திரையுலகில் வளர்ந்த நடிகையாக இருப்பவர் ஸ்வரா பாஸ்கர்.  இவர் தனு வெட்ஸ் மனு, வீர் தி வெட்டிங் மற்றும் நடிகர் தனுஷ் நடித்த ராஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

மும்பையில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, திரை துறைக்கு வரும் ஒவ்வொருவரும், அவர்களது தோற்றத்தின் அடிப்படையில் நிராகரிக்கப்படும் சூழலை சந்திக்க வேண்டி உள்ளது என நான் நினைக்கின்றேன் என கூறினார்.

இல்லையென்றால் நடிகர், நடிகைகளான நாங்கள் ஒப்பனை செய்வதற்காக அதிகம் செலவிட வேண்டிய தேவை இல்லை.  இவை அனைத்தும் ஒரு மனிதரின் மனநிலையில் ஏற்படும் பிரதிபலிப்பே ஆகும்.

நான் மும்பைக்கு வந்தபொழுது, இயக்குநர் ஒருவர், நீ ரொம்ப புத்திசாலியாக இருக்கிறாய் என கூறி படத்தில் நடிக்க வாய்ப்பு மறுத்து விட்டார்.  இதற்கு என்ன பொருள் என்று எனக்கு இன்னும் புரியவில்லை.  அதனால் திரை துறையில் அழகு மற்றும் தோற்றம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என கூறியுள்ளார்.