சினிமா செய்திகள்

இந்திய நடிகைகளில் அதிக சம்பளம்கங்கனா ரணாவத்துக்கு ரூ.14 கோடி + "||" + Rs 14 crore for Kangana Ranawat

இந்திய நடிகைகளில் அதிக சம்பளம்கங்கனா ரணாவத்துக்கு ரூ.14 கோடி

இந்திய நடிகைகளில் அதிக சம்பளம்கங்கனா ரணாவத்துக்கு ரூ.14 கோடி
அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் கங்கனா ரணாவத் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்தி படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் உள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமன்றி மற்ற பகுதிகளிலும் வசூல் குவிக்கின்றன. இதனால் அந்த படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பெரிய அளவில் சம்பளம் வாங்குகிறார்கள்.

கடந்த வருடம் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோனே ரூ.13 கோடி பெற்று முதல் இடத்தில் இருந்தார். இவர் நடித்து வெளிவந்த பத்மாவத் படம் ரூ.215 கோடி செலவில் தயாராகி ரூ.580 கோடி வசூல் பார்த்தது. கங்கனா ரணாவத் ரூ.12 கோடி பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தார்.

இந்த வருடம் கங்கனா ரணாவத் முதல் இடத்தை பிடித்துள்ளார். ராணி லட்சுமிபாய் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் மணிகர்னிகா படத்தில் லட்சுமிபாயாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் ரூ.14 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய நடிகைகள் எவரும் இதுவரை இவ்வளவு சம்பளம் பெற்றது இல்லை.

கங்கனா ரணாவத் நடித்த குயீன் படம் வசூல் சாதனைகள் நிகழ்த்தியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு படத்துக்கு படம் சம்பளத்தை கூட்டி வந்த அவர் இப்போது ரூ.14 கோடி பெற்று இருக்கிறார். கங்கனா ரணாவத் தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...