சினிமா செய்திகள்

சினிமா கேள்வி பதில்! : குருவியார் + "||" + Cinema question and answer : Kuruviyar

சினிமா கேள்வி பதில்! : குருவியார்

சினிமா கேள்வி பதில்! : குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
விஜய்யும், அஜித்தும் மீண்டும் இணைந்து நடிப்பார்களா? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? (சுரா.கணேசன், ஊத்துக்குளி)

இரண்டு பேரும் வட துருவம்-தென் துருவமாக தனித்தனியே நட்சத்திர புகழுடன் வாழ்ந்து வருகிறார்கள். இப்படியே நீடிக்கலாம் என இருவரும் ஏற்கனவே முடிவெடுத்து இருக் கிறார்கள்!

***

நயன்தாராவை அடுத்து விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம் கேட்பவர் யார்? (வி.கவின், மும்பை)

சமந்தா!

***

குருவியாரே, குலசேகரபட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா போல் ஒரு கோவில் திருவிழாவை வேறு எங்கும் பார்க்க முடியாது. அந்த திருவிழா காட்சிகளை யாராவது படமாக்கி இருக்கிறார்களா? (வி.பாலாஜி, ஸ்ரீரங்கம்)

ஒன்றிரண்டு படங்களில், சில காட்சிகளில் மட்டும் குலசேகரபட்டினம் முத்தாரம்மனின் தசரா திருவிழாவை காட்டியிருக்கிறார்கள். முழுமையாக யாரும் படமாக்கவில்லை!

***

குருவியாரே, பல வெற்றி படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிகுமார், ஜவுளிக்கடை விளம்பர படத்தில் நடித்து இருக்கிறாரே...புதிய படங்கள் எதையும் அவர் இயக்கவில்லையா? (ஆர்.சுதாகரன், வேலூர்)

கே.எஸ்.ரவிகுமார், ‘யோக்கியன்’ உள்பட 8 புதிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை!

***

‘பவர் பாண்டி’ படத்தை டைரக்டு செய்த நடிகர் தனுஷ், அடுத்து ஒரு படத்தை இயக்குவாரா? (டி.ஆல்பர்ட், தாரமங்கலம்)

அதற்கான பேச்சுவார்த்தையில் தனுஷ் ஈடுபட்டு இருக்கிறார்!

***

காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரில் சிறந்த அழகி யார்? சிறப்பாக நடிப்பவர் யார்? (எம்.மோகன், திண்டிவனம்)

காஜல் அகர்வாலுக்கு ‘பளிச்’ என்ற தோற்றம். அதை அழகு என்று கூற முடியாது. படத்துக்கு படம் அவர் 4 பாடல்களுக்கு ஆடிவிட்டு போவதை நடிப்பு திறமை என்று சொல்ல முடியாது. இந்த 2 பலவீனங்களும் கீர்த்தி சுரேசிடம் இல்லை!

***

குருவியாரே, நூற்றுக் கணக்கான படங்களில் நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி, எல்லோரையும் சிரிக்க வைத்த சார்லி, ஓய்வு நேரங்களில் என்ன செய்கிறார்? (ஏ.புகழேந்தி, நசரத்பேட்டை)

சார்லி, ஒரு படத்தை டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். ஓய்வு நேரங்களில், அதற்கான கதை விவாதங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்!

***

குருவியாரே, திரிஷா-நயன்தாரா இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால்...? (கே.ராஜீவ், மும்பை)

‘2 அழகிகளின் கதை’ என்று படத்துக்கு பெயர் சூட்டலாம்!

***

நடிகையாக இருந்து நடன இயக்குனராக மாறிய காயத்ரி ரகுராம் நடிப்பை தொடர்கிறாரா, இல்லையா? (எஸ்.கோபால், மோகனூர்)

காயத்ரி ரகுராம் நடிப்பு, நடனம் இரண்டையும் தொடர்கிறார்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நடித்த ‘ராஜா,’ எந்த மொழி படத்தின் தழுவல்? ஒரிஜினல் படத்தில் ஹீரோ யார்? (சி.டேனியல், ஜோலார்பேட்டை)

‘ஜானி மேரா நாம்’ என்ற இந்தி படத்தின் தழுவல். இந்தி படத்தில் தேவ் ஆனந்த் கதாநாயகனாக நடித்து இருந்தார்!

***

குருவியாரே, ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தில் அவருடைய வேடத்தில் நயன்தாரா நடிக்கிறாராமே... ஜெயலலிதா வேடத்துக்கு நயன்தாரா பொருத்தமாக இருப்பாரா? (எம்.கே.ஸ்ரீதர் ராஜன், மதுரவாயல்)

100 சதவீதம் பொருத்தமாக இருப்பார்!

***

முன்னணி கதாநாயகிகளில் அதிக அளவில் கவர்ச்சி காட்டி நடிப்பவர் யார்? அவரிடம் கவர்ச்சி காட்சிகளை ரசிகர்கள் எதிர்பார்க் கிறார்களா? (பி.சரவணன், அறந்தாங்கி)

அமலாபால்! இவரிடம் கவர்ச்சியான தோற்றங்களையும், நடிப்பையும் ரசிகர்கள் எதிர்பார்க் கிறார்களாம்!

***

குருவியாரே, சமீபத்தில் திரைக்கு வந்த படங்களில் எதிர்பாராத அளவுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்திய படம் எது? (கே.கிரிதரன், கோபிச்செட்டிப்பாளையம்)

விஜய் சேதுபதி, திரிஷா ஆகிய இருவரும் நடித்த ‘96’ படம், அனைத்து தரப்பினருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது! 

***

‘துருவ நட்சத்திரம்’ படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படம் எது? அந்த படத்தின் தயாரிப்பாளர் யார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

‘துருவ நட்சத்திரம்’ படத்தை அடுத்து விக்ரம், ராஜேஷ் எம். இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதில், உளவு துறை அதிகாரியாக விக்ரம் நடிக்கிறார். படத்தில் அவருக்கு ஜோடி இல்லை!

***

மணிரத்னம் இயக்கி வெளிவந்த ‘செக்கச் சிவந்த வானம்’ வெற்றி படமா அல்லது தோல்வி படமா? (சங்கீதா, காஞ்சீபுரம்)

ஒரு வாரம் ஓடினாலே வெற்றி படம் என்று கூறப்படும் நிலையில், ‘செக்கச் சிவந்த வானம்’ 3 வாரங்களை கடந்து 4–வது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

***

கவர்ச்சி நடிகை சோனாவை திரையில் பார்த்து ரொம்ப நாளாச்சே...அவர் நடித்துக் கொண்டிருக்கிறாரா, இல்லையா? (கே.கதிர்வேல், உடையாப்பட்டி)

சோனா நடித்துள்ள ‘அவதார வேட்டை’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தொடர்ந்து திரிஷா கதாநாயகியாக நடித்து வரும் ‘பரமபதம்’ படத்தில், சோனா அரசியல்வாதியாக நடித்துள்ளார். இவை தவிர, ‘அசால்ட்’ என்ற படமும் அவர் கைவசம் உள்ளது. மேலும் 3 மலையாள படங்களிலும் அவர் நடித்துக் கொண்டிருப்பதாக தகவல்!

***

குருவியாரே, ‘தனி ஒருவன்–2’ படம் எப்போது தொடங்கும்? அந்த படத்திலும் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பாரா? (பி.விக்ரம் குமார், சென்னை–1)

‘தனி ஒருவன்–2’ படம் வருகிற ஜனவரி மாதம் தொடங்கும். ஜெயம் ரவி கதாநாயகனாக நடிப்பார். கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக, நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மோகன்ராஜா டைரக்டு செய்வார். 

***

தொடர்புடைய செய்திகள்

1. சினிமா கேள்வி பதில் ! குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை–600007
2. சினிமா கேள்வி பதில்! குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை&600007
3. சினிமா கேள்வி-பதில் : குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை–600007
4. சினிமா கேள்வி பதில் ! குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
5. சினிமா கேள்வி-பதில்! : குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007