சினிமா செய்திகள்

“என்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர்” - நடிகை யாஷிகா புகார் + "||" + "The big director who invited me to bed" - actress Yashika's complaint

“என்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர்” - நடிகை யாஷிகா புகார்

“என்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர்” - நடிகை யாஷிகா புகார்
தன்னை ஒரு பெரிய டைரக்டர் படுக்கைக்கு அழைத்ததாக நடிகை யாஷிகா புகார் தெரிவித்துள்ளார்.
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பிரபலமானவர் யாஷிகா. துருவங்கள் பதினாறு, நோட்டா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மீ டூ இயக்கம் குறித்து கருத்து தெரிவித்த யாஷிகா பெரிய டைரக்டர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-


“மீ டூ இயக்கத்தை ஆதரிக்கிறேன். எல்லா துறைகளில் உள்ள பெண்களுக்கும் பாலியல் தொல்லையை சந்தித்த அனுபவம் இருக்கும். எனக்கும் அது நடந்து இருக்கிறது. பட வாய்ப்புக்காக பெரிய டைரக்டரை சந்திதேன். அவர் புகழ் பெற்ற நடிகரின் அப்பா மாதிரி. நடிப்பு திறைமையை சோதித்தார். அதன்பிறகு என்னை வெளியே அனுப்பினார். எனது அம்மாவிடம் பட வாய்ப்புக்கு பதிலாக என்னை அவரது படுக்கைக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் நேரடியாக கேட்டு இருந்தால் புகார் செய்து இருப்பேன். பொது இடத்தில் ஒருவர் என் பின்னால் தட்டி பாலியல் ரீதியாக சீண்டினார். அந்த இடத்திலேயே அவரை அடித்தேன். என் வீடு அருகில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக அணுகினார். அதுகுறித்து போலீசில் புகார் செய்தேன். சில மாதங்களுக்கு முன்பு சாலையில் நின்ற பெண்ணிடம் போலீஸ்காரர் ஒருவர் உன் ‘ரேட்’ என்ன என்று கேட்பதுபோன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்த பெண் நான்தான். அதுகுறித்தும் புகார் செய்தேன்.”

இவ்வாறு யாஷிகா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பூதப்பாண்டி பேரூராட்சியில் முறைகேடு புகார்: செயல் அலுவலர், உதவியாளர் பணியிடை நீக்கம் உதவி இயக்குனர் நடவடிக்கை
பூதப்பாண்டி பேரூராட்சியில் முறைகேடு புகார் தொடர்பாக செயல் அலுவலர், உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
2. குறிப்பிட்ட சமுதாயத்தை தவறாக பேசியதாக குற்றச்சாட்டு; தா.பாண்டியனை கைது செய்ய வேண்டும், மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் புகார் மனு
குறிப்பிட்ட சமுதாயத்தை தவறாக பேசியதாக குற்றம்சாட்டி, தா.பாண்டியனை கைது செய்ய வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
3. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை இணையதளத்தில் புகார் செய்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை இணையதளத்தில் புகார் செய்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறினார்.
4. சிகிச்சைக்கு செலவழித்ததாக ஏமாற்றி உடல்நிலை பாதித்த மூதாட்டியிடம் 75 பவுன் நகை மோசடி; உறவினர்கள் மீது புகார்
சிகிச்சைக்கு செலவழித்ததாக ஏமாற்றி 75 பவுன் நகையை மோசடி செய்ததாக உறவினர்கள் மீது உடல்நிலை பாதித்த மூதாட்டி புகார் கொடுத்தார்.
5. மருத்துவக்கல்லூரியில் பரபரப்பு விடுதி மாணவர்களின் ஆடையை களைய செய்து ராக்கிங் சீனியர் மாணவர்கள் மீது புகார்
நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு விடுதி மாணவர்களின் ஆடையை களைய செய்து சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.