சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியுடன் அஞ்சலி ஜோடி சேர்ந்தார் + "||" + Anjali joined the pair with Vijay Sethupathi

விஜய் சேதுபதியுடன் அஞ்சலி ஜோடி சேர்ந்தார்

விஜய் சேதுபதியுடன் அஞ்சலி ஜோடி சேர்ந்தார்
விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.
‘பாகுபலி-2’ படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷன்ஸ் தற்போது, ‘மடை திறந்து,’ ‘1945’ (தெலுங்கு), ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த நிறுவனம் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம், இது. முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் 30 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கி, தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற இருக்கிறது.

“விஜய் சேதுபதி நடிப்பில் பெரும்பகுதி காட்சிகள் வெளிநாட்டில் படமாவது, இதுதான் முதல் படம். அந்த அளவுக்கு கதையும், சூழலும் அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்தி வருகிறோம்” என்கிறார், டைரக்டர் அருண்குமார். காதலும், மோதலும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது தயாராகி வருகிறது.

‘சேதுபதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண்குமார் இயக்கும் படம், இது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.என்.ராஜராஜன், யுவன் சங்கர் ராஜா, இர்பான் மாலிக் ஆகிய மூவரும் கூட்டாக தயாரிக்கும் படம், இது. விஜய் சேதுபதி-அஞ்சலி நடித்த முக்கியமான காட்சிகள், தாய்லாந்தில் படமாகி வருகின்றன.