சினிமா செய்திகள்

நடிகை ஆடையை கிழிக்க சொன்ன டைரக்டர் – இந்தி நடிகர் புகார் + "||" + Director says tear the dress of the actress- a Hindi actor complains

நடிகை ஆடையை கிழிக்க சொன்ன டைரக்டர் – இந்தி நடிகர் புகார்

நடிகை ஆடையை  கிழிக்க சொன்ன டைரக்டர் – இந்தி நடிகர் புகார்
‘மீ டூ’ இயக்கம் நாடு முழுவதும் பரவி நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த பிரச்சினையில் சில இந்தி நடிகர்கள் ‘மீ டூ’வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
 நடிகைகளுக்கு ஏற்பட்ட சங்கடங்களையும் வெளிப்படுத்துகிறார்கள்.

பிரபல இந்தி நடிகர் தலிப் தாஹில் புதுமுக நடிகைக்கு நேர்ந்த தொல்லையை வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது:–

 ‘‘நான் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தி படமொன்றில் நடித்தேன். அதில் பலாத்கார காட்சியொன்றை படமாக்கினார்கள். படத்தின் டைரக்டர் என்னிடம் வந்து அந்த காட்சியில் நடிகையின் ஆடையை கிழித்து விடுங்கள் என்றார். ஆடையை கிழிக்கும் வி‌ஷயத்தை அந்த நடிகையிடம் சொல்ல வேண்டாம் என்றும் கூறினார்.


அதற்கு நான் மறுத்து விட்டேன். நடிகையிடம் சொல்லாமல் செய்வது நாகரிகமற்ற செயல் என்று மறுத்தேன். அந்த நடிகை சினிமாவுக்கு புதியவர். நடிகையை அழைத்து டைரக்டர் சொன்ன வி‌ஷயத்தை தெரிவித்தேன். அதை கேட்டதும் அந்த நடிகை அழுதுகொண்டே ஒரு அறைக்குள் ஓடிவிட்டார்.

அந்த காலத்தில் செல்போன்கள் இல்லை. கேமரா மட்டுமே இருந்தது. நடிகையை அழைத்து டைரக்டர் சொன்னதுபோல் எதுவும் செய்ய மாட்டேன் என்று கூறி படப்பிடிப்பை நடத்தினோம்’’

இவ்வாறு அவர் கூறினார்.