சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி-அருண் விஜய்யுடன்டி.சிவாவின் புதிய படம், ‘அக்னிச் சிறகுகள்’ + "||" + agni siragugal movie

விஜய் ஆண்டனி-அருண் விஜய்யுடன்டி.சிவாவின் புதிய படம், ‘அக்னிச் சிறகுகள்’

விஜய் ஆண்டனி-அருண் விஜய்யுடன்டி.சிவாவின் புதிய படம், ‘அக்னிச் சிறகுகள்’
தெய்வ வாக்கு, சின்ன மாப்ளே, அரவிந்தன், சரோஜா உள்பட 22 படங்களை தயாரித்த பட நிறுவனம், டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் 23-வது படத்துக்கு, ‘அக்னிச் சிறகுகள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
அக்னிச் சிறகுகள் படத்தை பற்றி அதன் டைரக்டர் ‘மூடர் கூடம்’ நவீன் கூறியதாவது:-

‘‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். கதாநாயகனுக்கு இணையான மிக முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, சென்றாயன் ஆகியோரும் நடிக்கிறார்கள். நடராஜன் ஷங்கர் இசையமைக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி நான் (நவீன்) இயக்குகிறேன்.

இது, ஒரு திகில் படம். விஜய் ஆண்டனிக்காக எழுதப்பட்ட கதை அல்ல. கதை உருவான பின்னர்தான் இந்த கதாபாத்திரத்துக்கு விஜய் ஆண்டனி மட்டுமே பொருந்துவார் என தோன்றியது. கதை தேர்வு, நடிகர்-நடிகைகள் தேர்வு, படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு ஆகியவற்றில் தயாரிப்பாளர் டி.சிவாவின் பங்களிப்பு அதிகம். இந்த படத்துக்குப்பின், அருண்விஜய் தமிழ் பட உலகில் தனக்கென தனி இடத்தை நிர்ணயம் செய்து கொள்வார்.

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கி கொல்கத்தா, கோவா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. சண்டை காட்சிகள், வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன.’’